வைரலாகும் பிரபல நடிகையின் சிறு வயது புகைப்படம்! - அந்த நடிகை யார் தெரியுமா?

சினிமா தொடர்பாக சமூக வலைதளங்களில் வெளியாகும் சிறிய பதிவுகள் கூட இன்று உலக அளவில் டிரெண்டாகி விடுகிறது. பிறகு அதை முன்னணி ஊடகங்கள் செய்திகளாக வெளியிடுவதோடு, சம்மந்தப்பட்டவர்களை தேடி பிடித்து பேட்டி எடுத்து, அந்த செய்தியை விஸ்வரூபமாக்கி விடுகிறார்கள்.
அந்த வகையில், தமிழ் சினிமாவின் பிரபல நடிகை ஒருவர் வெளியிட்ட தனது குழந்தை பருவ புகைப்படம் ஒன்று பெரும் வைரலாகி வருகிறது.
அந்த நடிகை ஆண்ட்ரியா. எப்போதும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வைரலாக்கும் ஆண்ட்ரியா, இந்த முறை தனது குழந்தை பருவ புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
பின்னணி பாடகி மற்றும் நடிகையாக வலம் வரும் ஆண்ட்ரியாவின் நடிப்பில் வெளியான ‘தரமணி’ விமர்சனம் ரீதியாக பெரும் வரவேற்பு பெற்றாலும், ஆண்ட்ரியாவுக்கு சரியான பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. தற்போது ’மாளிகை’, ‘கா’ என்ற இரண்டு கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வரும் ஆண்ட்ரியா, விஜய், அஜித் போன்ற முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடிக்க வேண்டும் என்ற தனது விருப்பத்தை பல முறை கூறினாலும், அது அவர்களின் காதுக்கு தான் போய் சேரவில்லை.