கமல் கூப்பிட்டால் ஓடிவிடுவேன்! - பிரபல நடிகையின் ஓபன் டாக்

கமலுக்கு கொரோனா பாதிப்பு என்ற செய்தி தீயாக பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்த, பிறகு அதற்கு காரணமான சென்னை மாநகராட்சியின் ஸ்டிக்கர் குறித்து மாநகராட்சி அளித்த விளக்கத்தால், கமல் ரசிகர்கல் நிம்மதியடைந்திருக்கும் நிலையில், பிரபல நடிகை ஒருவர், கமல் குறித்த ஸ்டேட்மெண்ட் ஒன்றால் மீண்டும் கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.
‘குட்டி புலி’ படம் மூலம் குணச்சித்திர நடிகையாக அறிமுகமானவர் தமிழ் செல்வி. அப்படத்தை தொடர்ந்து ‘கொம்பன்’, ‘மெட்ராஸ்’, ‘காஷ்மோரா’, ‘கதக்களி’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களிலும், காமெடி வேடங்களிலும் நடித்து வருபவர் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருகிறார். இவருக்கு என்று பெரிய ரசிகர் வட்டமே இருக்க, இவரை பல ரசிகர்கள் ‘தமிழ் செல்வி ஆண்டி’ என்று செல்லமாக அழைப்பதோடு, இவர் பற்றி சமூக வலைதளங்களில் அவ்வபோது பல பதிவுகளையும், புகைப்படங்களையும் வெளியிட்டு வைரலாக்கி வருகிறார்கள்.
இந்த நிலையில், சமீபத்தில் யுடியுப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த நடிகை தமிழ் செல்வி, அஜித், கமல், சூர்யா, கார்த்தி என பல ஹீரோக்கள் படங்களில் நடித்திருக்கிறேன். சில ஹீரோக்கள் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தும், கால்ஷீட் காரணமாக நடிக்க முடியாமல் போயுள்ளது, என்று தெரிவித்துள்ளார்.
அதே சமயம், ரஜினி, கமல் ஆகியோர் படங்களில் நடிக்க வாய்ப்பு வரவில்லை. அவர்கள் படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தால், தேதி பிரச்சி வந்தாலும், மற்றவைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, அவர்களின் படங்களுக்கு முன்னுரிமை கொடுப்பேன். அதிலும், கமல் கூப்பிட்டால் அனைத்தையும் விட்டுவிட்டு ஓடிவிடுவேன், என்று தெரிவித்துள்ளார்.
இதே பேட்டியில், அஜித் படத்தில் நடிக்கும் போது, அவரை பார்த்ததும் அவர் கண்ணத்தை பிடித்து கிள்ள வேண்டும், போல இருந்தது என்றும் தெரிவித்துள்ளார்.