Jun 15, 2020 03:57 PM

பிரபல நடிகை மரணம்! - சோகத்தில் திரையுலகம்

பிரபல நடிகை மரணம்! - சோகத்தில் திரையுலகம்

கடந்த சில மாதங்களாக திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் உயிரிழந்து வருவது திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று பாலிவுட் இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலை செய்துக் கொண்ட அதிர்ச்சியில் இருந்து திரையுலகின் மீளாத நிலையில், சினிமா உலகில் மற்றொரு மரணம் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

 

மலையாள சினிமாவின் பிரபல நடிகையும் மறைந்த இசையமைப்பாளர் எம்.ஜி.ராதாகிருஷ்ணனின் மனைவி பத்மஜா உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார்.

 

உடல் நலக்குறைவால் கடந்த சில நாட்களாக கேரளாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகை பத்மஜா, இன்று அதிகாலை 1 மணியளவில் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.

 

Actress Padmaja

 

68 வயதான அவருக்கு, ராஜ கிருஷ்ணன் என்ற மகனும் கார்த்திகா என்ற மகளும் இருக்கின்றனர். பத்மஜா மறைவுக்கு பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.