Dec 11, 2019 03:06 AM

ரஜினிக்கு வில்லியாகும் பிரபல நடிகை!

ரஜினிக்கு வில்லியாகும் பிரபல நடிகை!

ரஜினியின் ‘தர்பார்’ பொங்கலுக்கு வெளியாக உள்ள நிலையில், அவரது 168வது படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்தை ‘தலைவர் 168’ என்று அழைக்கின்றனர்.

 

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் நடிகர், நடிகைகள் குறித்த அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் கடந்த இரண்டு தினங்களாக அறிவித்து வருகிறது.

 

அந்த வகையில் முதலில் நடிகர் சூரி படத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து கீர்த்தி சுரேஷும், நடிகை மீனாவும் ‘தலைவர் 168’ படத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. இவர்கள் இப்படத்தில் நடிப்பதே ஏற்கனவே வெளியான தகவல் தான் என்பதால், இதில் எந்த வித சர்பிரைஸும் இல்லை.

 

அதே சமயம், ‘தலைவர் 168’ படத்தில் பிரகாஷ்ராஜ் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது ரசிகர்களுக்கு சர்பிரைஸாக இருந்தது. காரணம், சிவாஜி உள்ளிட்ட ரஜினியின் சில படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தும் நிராகரித்த பிரகாஷ்ராஜ், இப்படம் மூலமாக முதன் முறையாக ரஜினியுடன் நடிக்கிறார்.

 

மேலும், நடிகை குஷ்புவும் இப்படத்தில் முக்கியமான வேடத்தில் நடிப்பதாக சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது. மன்னன், அண்ணாமலை, பாண்டியன் என தொடர்ந்து ரஜினியுடன் மூன்று படங்களில் நடித்த குஷ்பு, சுமார் 27 வருடங்களுக்குப் பிறகு ரஜினி படத்தில் நடிக்கிறார்.

 

Kushboo

 

’தலைவர் 168’ படத்தில் மீனா ரஜினிக்கு ஜோடியாக நடிப்பதாகவும், குஷ்பு ரஜினிக்கு வில்லியாக நடிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல், கீர்த்தி சுரேஷ் ரஜினியின் தங்கை வேடத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.