சத்தமில்லாமல் நடந்த பிரபல நடிகையின் நிச்சயதார்த்தம்

கொரோனா ஊரடங்கினால் பலர் திருமணங்களை ஒத்தி வைக்கிறார்கள். பலர், எளிமையான முறையில் தங்களது வீடுகளில் நடத்திக் கொள்கிறார்கள். அந்த வகையில், ஏராளமான தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் கதாநாயகியாக நடித்திருக்கும் நடிகை ஒருவரது திருமண நிச்சயதார்த்தம் சத்தமில்லாமல் நடைபெற்று இருக்கிறது.
’அமரகாவியம்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் மியா ஜார்ஜ். இப்படத்தை தொடர்ந்து ’இன்று நேற்று நாளை’, ‘வெற்றிவேல்’, ‘ஒருநாள் கூத்து’, ‘எமன்’ உள்ளிட்ட பல தமிழ்ப் படங்களில் நடித்திருக்கும் இவருக்கு தற்போது தமிழில் எந்த படமும் இல்லை. அதே சமயம், மலையாள சினிமாவில் பிஸியாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில், மியா ஜார்ஜுக்கு சமீபத்தில் திருமணம் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. கொரோனா ஊரடங்கினால் மிக எளிமையான முறையில் இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது. அஸ்வின் பிலிப் என்பவரை மியா ஜார்ஜ் திருமணம் செய்துக் கொள்ள போகிறார். இவர்களது திருமணம் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ளது.