Jun 21, 2020 07:37 AM
பிரபல தமிழ் நடிகையின் கணவர் கொரோனாவால் மரணம்!

தமிழகத்தில் கொரோனாவில் பரவல் அதிகரித்து வரும் நிலையில், சினிமா பிரபலங்கள் பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், சில தயாரிப்பாளர்களும், பைனான்சியர்களும் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையே, தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜாம் அவர்களின் கணவரும், பிரபல பாடகருமான ஏ.எல்.ராகவன், காய்ச்சல் காரணமாக நேற்று முன் தினம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பிறகு அவருக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்தார். இதையடுத்து அவர் நெஞ்சு வலி காரணமாகவே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், மாரடைப்பால் உயிரிழந்ததாக கூறப்பட்ட ஏ.எல்.ராகவனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மேலும், அவரது மனைவி எம்.என்.ராஜத்துக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.