Jun 01, 2019 07:14 AM

5 வது முறையாக விஜய்க்கு ஜோடியாகும் நடிகை!

5 வது  முறையாக விஜய்க்கு ஜோடியாகும் நடிகை!

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘தளபதி 63’ படத்தின் தலைப்பு மற்றும் பஸ்ட் லும் வரும் ஜூன் 22 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், விஜய் தனது அடுத்தப்படத்திற்கான கதையை கேட்க தொடங்கியிருக்கிறார்.

 

தற்போது விஜயின் 64 வது படத்தை இயக்கப் போவது ‘மாநகரம்’ படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் தான் என்பது உறுதியாகியிருப்பதாக கூறப்படுகிறது. மேலும், அருண்ராஜா காமராஜ் உள்ளிட்ட சில இயக்குநர்களிடமும் விஜய் கதை கேட்டிருப்பதாக கூறப்படுகிறது. ஆனாலும், லோகேஷ் கனகராஜ் கூறிய போலீஸ் மற்றும் அரசியல் கதை விஜய்க்கு பிடித்துவிட்டதால், அக்கதைக்கு முழு திரைக்கதையை எழுதுமாறு லோகேஷ் கனகராஜிடம் அவர் கூறிவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 

இந்த நிலையில், விஜயின் 64 வது படத்தில் ஹீரோயினாக திரிஷாவை நடிக்க வைக்க இருப்பதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. தற்போது இது தொடர்பாக திரிஷாவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

 

Trisha

 

ஏற்கனவே விஜயுடன் ‘கில்லி’, ‘ஆதி’, ‘குருவி’, ‘திருப்பாச்சி’ என்று நான்கு படங்களில் நடித்திருக்கும் திரிஷா, தற்போது 5 வது முறையாக ஜோடி சேர இருக்கிறார்.

 

Vijay and Trisha in Gilli