Oct 28, 2019 02:51 PM

அஜித் படத்தில் நடிக்க மறுத்த பிரபல நடிகை!

அஜித் படத்தில் நடிக்க மறுத்த பிரபல நடிகை!

‘நேர்கொண்ட பார்வை’ படத்தை தொடர்ந்து இயக்குநர் வினோத்துடன் மீண்டும் அஜித் கை கோர்த்திருக்கிறார். ‘வலிமை’ என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இப்படத்தின் துவக்க விழா சமீபத்தில் எளிமையான பூஜையுடன் நடைபெற்ற நிலையில், படப்பிடிப்பு டிசம்பர் மாதம் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.

 

தற்போது படத்தின் பிற நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வரும் நிலையில், பிரபல பாலிவு நடிகை பரிணிதி சோப்ராவை முக்கிய வேடம் ஒன்றில் நடிக்குமாறு ‘வலிமை’ படக்குழு அனுகியிருக்கிறது. ஆனால், அவர் தேதி இல்லை, என்று கூறி நடிக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

 

Pranithi Chopra

 

போலீஸ் அதிகாரி, பைக் ரேசர் என்று இரண்டு விதமான கெட்டப்புகளில் அஜித் நடிக்கும் இப்படத்தில் ஹீரோயினாக நயன்தாராவை நடிக்க வைக்க படக்குழு முடிவு செய்திருப்பதாக மற்றொரு தகவலும் கசிந்துள்ளது.