பிக் பாஸ் அழைப்பை நிராகரித்த பிரபல நடிகை! - காரணம் இது தான்

தமிழக தொலைக்காட்சி ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்ட டிவி நிகழ்ச்சியான பிக் பாஸின் சீசன் 3 விரைவில் துவங்க உள்ளது. இதற்காக புரோமோ படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வரும் நிலையில், போட்டியாளர்களாக பங்கேற்க இருப்பவர்களின் பட்டியலும் வெளியாகிக் கொண்டிருக்கிறது.
வெளியாகும் போட்டியாளர்கள் பட்டியல் அதிகாரப்பூர்வமானது இல்லை என்றாலும், அந்த பட்டியலில் இருந்து சிலர் பங்கேற்பது உறுதி என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், ‘மயக்கம் என்ன’, ‘இறைவி’, ‘ஆண்டவன் கட்டளை’, ‘அயோக்யா’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து வரும் பூஜா தேவாரியாவுக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்த வந்த அழைப்பை அவர் நிராகரித்திருக்கிறார்.
இது குறித்து அவரிடம் கேட்டதற்கு, ”பிக் பாஸ் சீசன் 3 மட்டும் அல்ல, கடந்த அனைத்து சீசன்களிலும் பிக் பாஸில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. நான் தான் தொடர்ந்து அதை நிராகரித்து வருகிறேன்.
எனக்கு அடுத்தவர் முன் தூங்குவது, ப்ரஷ் செய்வது எல்லாம் பிடிக்காது. அதற்காக அதில் கலந்துக் கொள்பவர்களை இழிவாக நினைக்கவில்லை. இதில் கலந்து கொள்பவர்கள் எல்லாம் க்ரேட்.” என்று தெரிவித்துள்ளார்.