Jun 25, 2019 12:27 PM

விஜய் சேதுபதி படத்தில் நடிக்க மறுத்த பிரபல நடிகை!

விஜய் சேதுபதி படத்தில் நடிக்க மறுத்த பிரபல நடிகை!

விஜய் சேதுபதி, அஞ்சலி நடிப்பில் உருவாகியுள்ள ‘சிந்துபாத்’ படம் சிக்கலில் சிக்கியிருப்பதால் ரிலீஸில் சந்தேகம் எழுந்துள்ளது. தற்போது எஸ்.பி.ஜனநாதனின் ‘லாபம்’ படத்தில் நடித்து வரும் விஜய் சேதுபதி, அப்படியே ஜனநாதனின் உதவியாளரான வெங்கட கிருஷ்ண ரோகநாத் என்பவர் இயக்கும் படத்திலும் நடிக்கிறார்.

 

இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் சமீபத்தில் பழனியில் தொடங்கியது. இப்படத்தில் அமலா பால் ஹீரோயினாக ஒப்பந்தமானார்.

 

இந்த நிலையில், விஜய் சேதுபதி படத்தில் இருந்து அமலா பால், திடீரென்று விலகியுள்ளார். தேதி ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டதால், தன்னால் தொடர்ந்து நடிக்க முடியவில்லை, என்று கூறி அமலா பால் விலகிவிட்டதாக கூறப்படுகிறது.

 

Actress Amala Paul

 

தற்போது, அமலா பாலுக்கு பதிலாக மேகா ஆகாஷை விஜய் சேதுபதிக்கு ஜோடியாக்கி இருக்கிறார்களாம்.

 

கெளதம் மேனன் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ படம் மூலம் சினிமாவுக்குள் நுழனைந்த மேகா ஆகாஷின் முதல் படமாக வெளியானது சிம்புவின் ‘வந்தா ராஜாவாகத்தான் வருவேன்’ பிறகு ரஜினியின் பேட்ட படத்தில் சிறு வேடம் ஒன்றில் நடித்தவர் ‘பூமராங்’ படத்தில் ஹீரோயினாக நடித்தார்.

 

இவரது நடிப்பில் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ மற்றும் ‘ஒரு பக்க கதை’ ஆகிய படங்கள் வெளியாகமல் இருக்கிறது.

 

Actress Megha Akash

 

தமிழ் மட்டும் இன்றி தெலுங்குப் படங்களிலும் நடித்து வரும் மேகா ஆகாஷ், ’சேட்டிலைட் ஷங்கர்’ என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளார்.