Jul 31, 2019 03:49 PM

அஜித்துக்கு மகளாகும் வாரிசு நடிகை!

அஜித்துக்கு மகளாகும் வாரிசு நடிகை!

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் நடித்து முடித்திருக்கும் அஜித், தனது அடுத்தப் படத்திற்கு தயாராகிவிட்டார். அஜித்தின் 60 வது படமாக உருவாகும் இப்படத்தையும் போனி கபூர் தான் தயாரிக்கிறார். நேர்கொண்ட பார்வை பட இயக்குநர் எச்.வினோத் இயக்குகிறார்.

 

’விஸ்வாசம்’, ‘நேர்கொண்ட பார்வை’ என இரண்டு படங்களிலும் வயதான தோற்றத்தில் நடித்திருக்கும் அஜித், 60 வது படத்திலும் வயதான தோற்றத்தில் தான் நடிக்கப் போகிறாராம். மேலும், இதில் அஜித்த்க்கு மகள் கதாபாத்திரமும் இருக்கிறதாம்.

 

அந்த கதாபாத்திரத்தில் நடிகை ஸ்ரீதேவின் மகள் ஜான்வி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பாலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமாகியுள்ள ஜான்வியை தமிழிலும் நாயகியாக அறிமுகப்படுத்த ஸ்ரீதேவி விரும்பினார். ஆனால், அதற்குள் அவர் இறந்துவிட்டார்.

 

தற்போது, ஸ்ரீதேவியின் ஆசையை நிறைவேற்றும் வகையில், தனது 60 படத்தில் மகள் வேடத்தில் ஜான்வியை நடிக்க வைக்க அஜித் ஒகே சொல்லியிருக்கிறாராம்.

 

Actress Jhanvi

 

ஏற்கனவே ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் ஜான்வி நடிக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில், கடைசியில் அது வெறும் வதந்தியானது. தற்போது வெளியாகியிருக்கும் தகவல் நிஜமா அல்லது இதுவும் வதந்தியா, என்ற் பொருத்திருந்து பார்ப்போம்.