Oct 22, 2019 03:40 AM

கவின், லொஸ்லியா காதலை மரண கலாய் கலாய்த்த பிரபல நடிகை!

கவின், லொஸ்லியா காதலை மரண கலாய் கலாய்த்த பிரபல நடிகை!

சமீபத்தில் முடிவடைந்த பிக் பாஸ் சீசன் 3-யின் முக்கிய போட்டியாளர்களாக கவின் மற்றும் லொஸ்லியா, பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போது தீவிரமான காதலில் இருந்தார்கள். இவர்களது காதல் தான், நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய கண்டெண்டாக இருந்தது.

 

இதையடுத்து பிக் பாஸ் வீட்டில் அவ்வபோது சில பரபரப்பான சம்பவங்கள் நடந்தாலும், கவின் - லொஸ்லியா காதலில் மட்டும் எந்தவித பிரச்சினையும் ஏற்படவில்லை என்றாலும், அந்த காதலை மையமாக வைத்து வீட்டில் பல பிரச்சினைகள் உருவானது.

 

தற்போது நிகழ்ச்சி முடிந்து, போட்டியாளர்கள் அவங்க வேலையில் கவனம் செலுத்த தொடங்கியிருக்கும் நிலையில், கவின் - லொஸ்லியா காதல் என்ன ஆனது? என்பது ரசிகர்களின் கேள்வியாக இருக்க, தற்போது கவின் - லொஸ்லியா காதலை தமிழ் சினிமாவில் நடிகை ஒருவர் மரண கலாய் கலாய்த்திருக்கிறார்.

 

அதாவது நிகழ்ச்சிக்காக நடத்தப்பட்ட நாடகம் தான் கவின் - லொஸ்லியா காதல், என்று நல்லெண்ணெய் நடிகை சித்ரா கூறியிருக்கிறார்.

 

இவர் பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்தும், போட்டியாளர்கள் குறித்தும் பல பேட்டிகளில் பேசி வரும் நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில், கவின் மற்றும் லொஸ்லியா காதலை ஃபாஸ் புட் காதல் என்றும், அவர்களின் காதல் வெறும் நாடகம் என்றும் விமர்சித்திருக்கிறார்.

 

Chitra

 

சித்ராவின் இந்த விமர்சனத்திற்கு லொஸ்லியா மற்றும் கவின் ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதோடு, நடிகை சித்ராவையும் விமர்சித்து வருகிறார்கள்.