Jun 14, 2020 11:35 AM

டோனியாக நடித்த பிரபல பாலிவுட் நடிகர் தற்கொலை! - அதிர்ச்சியில் திரையுலகம்

டோனியாக நடித்த பிரபல பாலிவுட் நடிகர் தற்கொலை! - அதிர்ச்சியில் திரையுலகம்

கிரிக்கெட் வீரர் டோனியின் வாழ்க்கை திரைப்படமான் ’எம்.எஸ்.டோனி - தி அண்டோல்ட் ஸ்டோரி’ (M.S. Dhoni: The Untold Story) திரைப்படத்தில் டோனியின் வேடத்தில் நடித்த பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்துக் கொண்டார்.

 

’கை பே சே’ என்ற படத்தின் மூலம் ஹீரோவாக இந்தி சினிமாவில் அறிமுகமான சுஷாந்த் சிங், தொடர்ந்து பல வெற்றிப் படங்களில் நடித்ததோடு, டோனியின் வாழ்க்கை திரைப்படத்தில் டோனியாக நடித்து அசத்தினார். மேலும், இவரது நடிப்பில் 2019 ஆம் ஆண்டு வெளியான மூன்று படங்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றன.

 

Dhoni and Sushant Singh

 

இந்த நிலையில், மன அழுத்தம் காரணமாக நடிகர் சுஷாந்த் சிங், இன்று தற்கொலை செய்துக் கொண்டது இந்திய சினிமாவையே அதிர்ச்சியடைய செய்துள்ளது.

 

34 வயதாகும் சுஷாந்த் சிங், இந்த இளம் வயதில் எதற்கு தற்கொலை செய்துக் கொண்டார், அவருக்கு மன அழுத்தம் ஏற்படும் அளவுக்கு என்ன பிரச்சினை, என்பது குறித்து இதுவரை தெரியவில்லை.