May 28, 2019 02:05 PM
’கே.ஜி.எப்’ படத்தில் பிரபல பாலிவுட் நடிகை!

கன்னட நடிகர் யாஷ் நடிப்பில் கடந்த வருடம் வெளியான ‘கே.ஜி.எப்’ இந்தியா முழுவதும் பெரும் வரவேற்பு பெற்றது. அறிமுக தொழில்நுட் கலைஞர்கள் மூலம் உருவான இப்படத்தின் மேகிங்கில் இருந்த பிரம்மாண்டம் தான் இதற்கு காரணம்.
முதல் பாகம் சத்தமில்லாமல் சாதித்ததை தொடர்ந்து ‘கே.ஜி.எப்’ இரண்டாம் பாகம் மிக பிரம்மாண்டமான முறையில் உருவாகி வருகிறது. ஏற்கனவே பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் இப்படத்தில் நடித்து வரும் நிலையில், மற்றொரு பாலிவுட் பிரபலமான ரவீனா இப்படத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
முதல் பாகம் பெற்ற வெற்றியால் இரண்டாம் பாகத்தின் மீது மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளதால் படத்தின் திரைக்கதையில் மாற்றம் செய்திருக்கும் படக்குழு காட்சிகள் அனைத்தையும் பிரம்மாண்டமான முறையில் படமாக்கி வருகிறார்களாம்.