May 14, 2019 07:00 PM
சாமியாரான பிரபல காமெடி நடிகரின் மகன்!

தமிழ் சினிமாவி மறக்க முடியாத காமெடி நடிகர்கள் பலர் இருக்கிறார்கள். அதில், ஓமக்குச்சி நரம்மனும் ஒருவர். நாடக நடிகரான இவர், நாடகங்கள் இயக்கிய போது, இயக்குநர் ஷங்கர் உதவியாளராக பணியாற்றியிருக்கிறார். அதனால் தான், தனது படங்கள் அனைத்திலும் ஓமக்குச்சி நரசிம்மனை ஷங்கர் நடிக்க வைப்பார்.
இந்த நிலையில், ஓமக்குச்சி நரசிம்மனின் ஒரே ஒரு மகன் சாமியாராக மாறிவிட்டாராம். சென்னை திருவல்லிக்கேணியில் கமேஷ்வரா சுவாமி என்ற பெயரில் அவர் பிரபலமான சாமியாராக வலம் வருகிறார்.
சித்தர்கள், சாய் பாபா, இயேசுவை நான் நேரில் சந்தித்திருக்கிறேன் என கூறியுள்ள அவர், அதன் பிறகுதான் என் ஆன்மிகத்தை நானே நம்பத் தொடங்கினேன் என்றும் கூறுகிறார்.