Jul 03, 2019 09:30 AM

பிரபல இயக்குநர்களை பிரமிக்க வைத்த ‘மாயபிம்பம்’

பிரபல இயக்குநர்களை பிரமிக்க வைத்த ‘மாயபிம்பம்’

அறிமுக இயக்குநர் சுரேந்தர் இயக்கி தயாரித்திருக்கும் படம் ‘மாயபிம்பம்’. காதல் கதையாக உருவாகியுள்ள இப்படத்தை பாலாஜி சக்திவேல், சுசீந்திரன், பாண்டியராஜ், வெற்றிமாறன் உள்ளிட்ட பல பிரபல இயக்குநர்கள் பார்த்து பிரமித்ததோடு, படத்தையும் இயக்குநர் சுரேந்தரையும் வெகுவாக பாராட்டியுள்ளார்கள்.

 

”காதலின் வலியை யதார்த்தமாக சொல்லியிருக்கிறீர்கள்” என்று படம் பார்த்த அனைத்து பிரபலங்களும் இயக்குநரை பாராட்ட, இயக்குந சுசீந்திரனின் தம்பியும், தயாரிப்பாளருமான தாய் சரவணன், இப்படத்தை வெளியிடுவதற்கான உதவிகளை செய்துள்ளார்.

 

புதுமுகங்கள் நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தை தயாரிக்க எந்த நிறுவனமும் முன்வராத நிலையில், சோர்வடைந்த இயக்குநர் சுரேந்தரின் நிலையை உணர்ந்த அவரது பெற்றோர், தங்களது ஓய்வூதிய தொகை, நகைகள், வாழ்நாள் சேமிப்பு என அனைத்தையும் முதலீடாக வைத்து இப்படம் உருவாக உதவியிருக்கிறார்கள்.

 

Mayabimbam Surendar

 

கதை குறித்து எதுவும் அறியாதவர்கள் தன் மகன் தவறாகப் போகமாட்டான் என்ற நம்பிக்கையில் இப்படம் முழுவதுமாக முடிந்த பிறகு திரையில் பார்த்து மகிழ்ந்திருக்கிறார்கள்.

 

பார்த்தவர்களை பிரமிப்பில் ஆழ்த்தி வரும் ‘மாயபிம்பம்’ ஜூலை இரண்டாம் வாரத்தில் வெளியாக உள்ளது.