Jan 31, 2020 07:42 AM

தலைக்கனத்தில் ஆடும் ஹிப் ஹாப் ஆதி! - வருத்தத்தில் பிரபல இயக்குநர்

தலைக்கனத்தில் ஆடும் ஹிப் ஹாப் ஆதி! - வருத்தத்தில் பிரபல இயக்குநர்

இசையமைப்பாளர், ஹீரோ, இயக்குநர் என்று தமிழ் சினிமாவில் பல பரிணாமத்தோடு வலம் வரும் ஹிப் ஹாப் ஆதி, தமிழ் ராப் பாடகராக யூடியூப் சேனல் மூலம் தனது இசை வாழ்க்கையை தொடங்கினார். தொடர்ந்து பல தனிப்பாடல்களை வெளியிட்டு ஒரு சில திரைப்படங்களில் பாடல்கள் பாடிக் கொண்டிருந்தவரை ‘ஆம்பள’ படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகம் செய்தவர் இயக்குநர் சுந்தர்.சி.

 

தொடர்ந்து தனது பல படங்களில் ஆதியை இசையமைப்பாளராக்கிய சுந்தர்.சி ‘மீசையை முறுக்கு’ படம் மூலம் ஆதியை இயக்குநராகவும், ஹீரோவாகவும் அறிமுகப்படுத்தினார். அப்படத்தை தொடர்ந்து, தனது தயாரிப்பான ‘நட்பே துணை’ மூலமாகவும் ஆதியை ஹீரோவாக நடிக்க வைத்த சுந்தர்.சி, தற்போது ‘நான் சிரித்தால்’ என்ற படத்தை ஆதியை ஹீரோவாக்கி தயாரித்துக் கொண்டிருக்கிறார்.

 

இப்படி சுந்தர்.சி யால் தமிழ் சினிமாவில் அறிமுகம் செய்யப்பட்டு, ஆளான ஆதி, தலைக்கனத்தால் ஆட்டம் போடுவதோடு, சுந்தர்.சி-யையே விரட்டியடித்த சம்பவம் பற்றி கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது.

 

தயாரிப்பாளருக்கு எந்தவித நஷ்ட்டமும் ஏற்படாமல், சரியான திட்டமிடலோடு படம் இயக்கும் இயக்குநர்களில் ஒருவரான சுந்தர்.சி, தான் தயாரிக்கும் படங்களை இயக்கும் இயக்குநர்களுக்கு பெரிய அளவில் சுதந்திரம் வழங்கி வருகிறார். படம் தரமாக இருக்க வேண்டும் என்பதற்காக, அதிகமாக செலவு செய்பவர், படப்பிடிப்பு நாட்களையும் அதிகரித்துக் கொள்ளும்படி சொல்வாராம். இப்படிதான் முதல் இரண்டு படங்களுக்கும் ஆதிக்கு அதிகமாக சுதந்திரம் கொடுத்திருக்கிறார். ஆனால், அந்த சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தும் ஆதி, படப்பிடிப்பு சரியான நேரத்திற்கு வராமல், படத்தை இழுத்துக் கொண்டே செல்கிறாராம்.

 

பொருத்து...பொருத்து...பார்த்த சுந்தர்.சி, ஒரு கட்டத்தில் ஆதியிடம் படப்பிடிப்பு குறித்து விசாரிக்க, அதற்கு ஆதி தனக்கு எல்லாம் தெரியும், என்று கூறி அவரை அவமானப்படுத்தியிருப்பதோடு, இனி என் படத்தில் தலையிடக் கூடாது, என்று விரட்டியடிக்கும் விதத்தில் பேசியிருக்கிறார்.

 

Sundar C

 

இதைக் கேட்ட சுந்தர்.சி உதவியாளர்கள் ஹிப் ஹாப் ஆதி மீது கடும் கோபத்தில் இருப்பதோடு, ”இனி இவனுக்கு எந்த வாய்ப்பும் கொடுக்காதீங்க சார்”, என்று சுந்தர்.சி-க்கு அறிவுரை கூறியிருக்கிறார்களாம்.

 

இதனால், சுந்தர்.சி இயக்கும் புதிய படத்தில் ஹிப் ஹாப் ஆதிக்கு பதிலாக சத்யா இசையமைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.