Jan 30, 2020 07:31 PM

”செருப்பால் அடிப்பேன்”! - பா.ரஞ்சித்தை மறைமுகமாக எச்சரித்த இயக்குநர்?

”செருப்பால் அடிப்பேன்”! - பா.ரஞ்சித்தை மறைமுகமாக எச்சரித்த இயக்குநர்?

தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குநராக உருவெடுத்திருக்கும் பா.ரஞ்சித்தை, சினிமாவை சேர்ந்த பலர் அவ்வபோது விமர்சித்து வருகிறார்கள். இதில் சிலர் நேரடியாகவும், பலர் மறைமுகமாகவும் விமர்சித்து வருகிறார்கள். அதற்கு காரணம், தலித் சிந்தனைகளை வெளிப்படையாக பேசும் பா.ரஞ்சித், தனது திரைப்படங்களிலும் அதை பயன்படுத்துவது தான்.

 

இந்த நிலையில், நேற்று சென்னை பிரசாத் லேபில் நடைபெற்ற ‘புறநகர்’ திரைப்பட விழாவில் ‘திமிரு’ படத்தின் இயக்குநர் தருண் கோபி, இயக்குநர் பா.ரஞ்சித்தை மறைமுகமாக எச்சரித்திருக்கிறார்.

 

அதாவது, நிகழ்ச்சியில் பேசிய தருண் கோபி, ”தயவுசெய்து சாதியைச் சொல்லிப் படம் எடுக்காதீர்கள். இந்த ஊடகத்தை தப்பா படம் எடுக்காதீர்கள். அப்படி சாதியைச் சொல்லி எவனாவது இனி வந்தா செருப்பால அடிப்பேன். எங்களுக்கு என்ன சாதின்னு தெரியாம தான் வளர்ந்தோம். ஆனால் இப்போது சாதியை அடையாளம் காட்டிக்கொள்கிறார்கள். சில பேர் அப்படி ஒரு டீம் அமைத்துத் திரிகிறார்கள். தயவுசெய்து அவர்கள் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும்” என்றார்.

 

Puranagar Audio Launch

 

அவர் செருப்பால் அடிப்பேன், என்று சொல்லிய நபர் பா.ரஞ்சித் தான் என்று பரவலாக பேசப்படுகிறது. காரணம் மேலே சொன்னது தான். அதேபோல், பா.ரஞ்சித் தனது படங்களில் சாதி குறித்து வெளிப்படையாக பேசிய பிறகே, சில இயக்குநர்கள் பேச தொடங்கியிருக்கிறார்கள், என்றும் கூறப்படுகிறது.

 

இதே நிகழ்ச்சியில் பேசிய இயக்குநரும், நடிகருமான கே.பாக்யராஜ், சினிமா உள்ளிட்ட பல இடங்களில் தற்போது சாதி குறித்து அதிகமாக பேசப்படுகிறது, என்று கூறி வருத்தப்பட்டார்.

 

அதேபோல், இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், சாதி பிவிரிவனை மற்றும் சாதி பிரிவினையை தவிர்ப்பது குறித்து நிகழ்ச்சியில் பேசினார்.

 

கமல் கோவின்ராஜ் தயாரித்து நடித்துள்ள படம் ’புறநகர்’. மின்னல் முருகன் எழுதி இயக்கியிருக்கும் இப்படத்திற்கு இ.எல்.இந்திரஜித் இசையமைத்திருக்கிறார்.