Oct 24, 2019 06:45 PM
பிரபல சீரியல் நடிகை கணவர் தற்கொலை!

பிரபல சீரியல் நடிகையான ராகவி, பல்வேறு தமிழ் சீரியல்களில் வில்லி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.
இவர் திருமணத்திற்குப் பிறகு நடிப்பதை குறைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இவருக்கு பெண் குழந்தை ஒன்றும் உள்ளது.
இந்த நிலையில் நடிகை ராகவியின் கணவர் சசிகுமார் கடன் பிரச்சினை காரணமான தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், இவரது மரணம் தற்கொலையா இல்லை கொலையா என்கிற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதை தவிர இவரது தற்கொலை குறித்து வேறு எந்த தகவல்களும் வெளியாகவில்லை.