May 06, 2019 06:52 AM

நடிகையாவதற்காக பட்ட கஷ்ட்டம்! - சீரியல் நடிகை கண்ணீருடன் பகிர்ந்துக் கொண்ட வீடியோ

நடிகையாவதற்காக பட்ட கஷ்ட்டம்! - சீரியல் நடிகை கண்ணீருடன் பகிர்ந்துக் கொண்ட வீடியோ

சினிமாவில் நடிகைகளுக்கு எந்த அளவுக்கு வரவேற்பு இருக்கிறதோ அதேபோல் சீரியலில் நடிக்கும் நடிகைகளுக்கும் வரவேற்பு இருக்கிறது. அத்துடன், பல பிரச்சினைகளை அவர்கள் சந்திக்கவும் நேரிடுகிறது.

 

அந்த வகையில், நடிகையாவதற்காக தான் அனுபவித்த துயரங்கள் பற்றி பிரபல சீரியல் நடிகை சித்ரா, பொது நிகழ்ச்சி ஓன்றில் கண்னீருடன் பகிர்ந்துக் கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

சின்னத்திரையில் தொகுப்பாளினியாக தனது பயணத்தை தொடங்கிய சித்ரா, ’சரவணன் மீனாட்சி’ சீரியல் மூலம் நடிகையாக அறிமுகமானவர், தற்போது ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் முல்லை என்கிற கதாபாத்திரத்தில் நடித்து ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ளார்.

 

இந்த நிலையில், விஜய் தொலைக்காட்சி நடத்திய விருது வழங்கு விழாவில் பேசிய நடிகை சித்ரா, தான் நடிகையாவதற்காக பட்ட கஷ்ட்டங்கள் குறித்து பேசியிருக்கிறார். தன்னை படிக்க வைக்கவே யோசித்த குடும்பத்தில் பிறந்த நான், மீடியாவுக்குள் நுழையவே பெரும் போராட்டங்களை சந்தித்ததாகவும், லத்தியால் அடி கூட வாங்கியதாக, கூறியவர், அழகு பற்றி தன் முகத்திற்கு எதிரே, “நீ எல்லாம் நடிகையாகப் போறீயா” என்று  கூறினார்களாம். அத்தனை தடைகளை எதிர்த்து, தற்போது இந்த நிலைமைக்கு வந்திருக்கிறேன், என்று கண் கலங்கியபடி கூறினார்.

 

அவரது வீடியோ இதோ,

 

 


View this post on Instagram

Long way to go🤪

A post shared by Chithu Vj (@chithuvj) on May 5, 2019 at 2:29am PDT