செந்தில் - ராஜலஷ்மியை கடுமையாக விமர்சித்த பிரபல பாடகர்

முன்னணி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாட்டு போட்டி நிகழ்ச்சியில் பங்கேற்ற நாட்டுப்புற பாடகர்கள் தம்பதியான செந்தில் - ராஜலஷ்மி ஜோடி பெரிய அளவில் பிரபலமானதோடு, ஏராளமான ரசிகர்களையும் பெற்றுள்ளார்கள்.
தற்போது சினிமாவிலும் பாட தொடங்கியிருக்கும் செந்தில் - ராஜலஷ்மி ஜோடி, பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பது, கச்சேரி என்று லட்சம் லட்சமாக சம்பாதிக்கவும் தொடங்கிவிட்டார்கள்.
இந்த நிலையில், நாட்டுப்புற பாடகரான புஷ்பவனம் குப்புசாமி - அனிதா ஜோடியினர், செந்தில் - ராஜலஷ்மி ஜோடியை மிக கடுமையாக விமர்சனம் செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து புஷ்பவனம் குப்புசாமி மற்றும் அனிதா இருவரும் ஒன்றாக அளித்த சமீபத்திய பேட்டியில், “பேசுவது எல்லாம் இரட்டை அர்த்தம், ஆபாசம். மக்கள் இசை கலைஞன் என ஒருவர் பாடுகிறான். மேடை முழுவதும் ஆபாசம். மனைவியை பக்கத்தில் வைத்துக்கொண்டே வேறு ஒரு பெண்ணிடம் அசிங்கமாக சைகை செய்கிறான். யூடியூப்பில் பார்த்து நொந்து பேனேன்.” என்று செந்தில் - ராஜலஷ்மி ஜோடியை தாக்கி பேசியுள்ளார்கள்.
மேலும், “இவர்களை பார்க்கும் போது இந்த துறையில் நாமும் இருக்க வேண்டுமா?, பாடுவதை நிறுத்திவிடலாமா என யோசிக்கிறேன்” என்று கூறியவர்க்கள், ரியாலிட்டி ஷோக்களில் நடப்பது எதுவும் ரியாலிட்டி இல்லை. யார் வெற்றி பெற வேண்டும் என முதலில் முடிவு செய்துவிட்டு பின்னர் அனைத்து விஷயங்களையும் செய்து அவர்களை வெற்றி பெற வைப்பார்கள், என்று அந்த தொலைக்காட்சியையும் விமர்சித்துள்ளனர்.