Jun 09, 2020 07:19 AM

கிறிஸ்தவ மத போதகறாக மாறிய பிரபல தமிழ் நடிகை!

கிறிஸ்தவ மத போதகறாக மாறிய பிரபல தமிழ் நடிகை!

தமிழ் சினிமாவை சேர்ந்த பல பிரபலங்கள் இந்து மதத்தில் இருந்து இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மதத்திற்கு மாறி வரும் நிலையில், பிரபல நடிகை ஒருவர் கிறிஸ்தவ மதத்திற்கு மாறியதோடு, மத போதகராகவும் பணியாற்றி வருகிறார்.

 

1991 ஆம் ஆண்டு வெளியான ‘ஈரமான ரோஜாவே’ படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக் அறிமுகமானவர் மோகினி. இவரது இயற்பெயர் மகாலக்‌ஷ்மி. தஞ்சை மாவட்டத்தில் இந்து குடும்பத்தில் பிறந்த இவர், சினிமாவுக்காக தனது பெயரை மோகினி என்று மாற்றிக் கொண்டு நடித்து வந்தார்.

 

Actress Mohini

 

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் நடித்து வந்த மோகினி, 1999 ஆம் ஆண்டு பரத் என்ற தொழிலதிபரை திருமணம் செய்துக் கொண்டு அமெரிக்காவில் குடியேறினார். பிறகு இவர்கள் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய நிலையில், நடிகை மோகினி தற்போது கிறிஸ்தவ மத போதகராக மாறியுள்ளார்.

 

மோகினி கிறிஸ்டினா என்ற பெயரில் கிறிஸ்தவ மத போதகராக வலம் வரும் மோகினிக்கு, அனிருத் மைக்கேல் பரத் மற்றும் அத்வைத் கேப்ரியல் பரத் என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.

 

Actress Mohini Family