Jun 11, 2020 05:32 PM

ஜோதிகாவின் படத்தை கைப்பற்றிய முன்னணி தொலைக்காட்சி

ஜோதிகாவின் படத்தை கைப்பற்றிய முன்னணி தொலைக்காட்சி

சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிப்பில், ஜோதிகா நடிப்பில், அறிமுக இயக்குநர் ஜே.ஜே.பெட்ரிக் இயக்கத்தில் வெளியான படம் ‘பொன்மகள் வந்தாள்’. தமிழ் சினிமாவிலேயே நேரடியாக ஒடிடி தளத்தில் வெளியான முதல் திரைப்படம் என்ற அடையாளத்தை பெற்ற படமாகும்.

 

ஜோதிகா வழக்கறிஞராக நடித்திருக்கும் இப்படத்தில், பாக்யராஜ், பாண்டியராஜன், பார்த்திபன், பிரதாப் போத்தன், தியாகராஜன் ஆகியோரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். பெண் குழந்தைகள் பாதுகாப்பை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

 

இந்த நிலையில், இப்படத்தின் தொலைக்காட்சி உரிமத்தை விஜய் தொலைக்காட்சி பெற்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ஒடிடி தளமான அமேசான் பிரைம் வீடியோவில் ‘பொன்மகள் வந்தாள்’ படத்தை ரிலீஸ் செய்யும் போதே, படம் ரிலீஸான தேதியில் இருந்து 70 நாட்களுக்குப் பிறகு தொலைக்காட்சியில் ஒளிபரப்பலாம், என்று ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாம்.

 

அதன்படி, கடந்த மே 29 ஆம் தேதி அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான ‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படம் விரைவில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருப்பதாக கூறப்படுகிறது.