Mar 04, 2019 06:54 PM

மார்ச் 8 ஆம் தேதி வெளியாகும் ‘பொட்டு’ படத்திற்கு 1000 தியேட்டர்கள்!

மார்ச் 8 ஆம் தேதி வெளியாகும் ‘பொட்டு’ படத்திற்கு 1000 தியேட்டர்கள்!

பரத் ஹீரோவாக நடித்திருக்கும் ‘பொட்டு’ படம் வரும் மார்ச் 8 ஆம் தேதி சுமார் 1000 திரையரங்குகளில் வெளியாகிறது. இதில் நாயகிகளாக நமீதா, இனியா, சிருஷ்டி டாங்கே ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் தம்பி ராமைய்யா, பரணி, நான் கடவுள் ராஜேந்திரன், ஊர்வசி, நிகேஷ்ராம், ஷாயாஜி ஷிண்டே, மன்சூரலிகான், ஆர்யன், சாமிநாதன், பாவா லட்சுமணன், பயில்வான் ரங்கநாதன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

 

ஷாலோம் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்திற்கு செந்தில் வசனம் எழுத அம்ரீஷ் இசையமைத்திருக்கிறார். இனியன் ஹரீஷ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். விவேகா, கருணாகரன், சொற்கோ, ஏக்நாத் ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளார்கள். இப்படத்தின் கதை, திரைக்கதை எழுதி வடிவுடையான் இயக்கியுள்ளார்.

 

ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் வெளியாகும் இப்படம் 1000 திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்படுகிறது. அதேபோல், கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் நேரடியாக தமிழிலும் ரிலீஸ் செய்யப்படுகிறது.

 

Pottu

 

மருத்துவக் கல்லூரி பின்னணியில் பயங்கரமான ஹாரர் படமாக உருவாகியுள்ள இப்படத்தில் பரத் பெண் வேடத்தில் நடித்திருக்கிறார். அதற்காக அவர் தனது உடல் மொழிகளை மாற்றி, அந்த கதாபாத்திரமாக மாறி சிறப்பாக நடித்துள்ளார்.

 

குழந்தை முதல் பெரியவர்கள் அனைத்து தரப்பினரும் பார்க்க கூடிய விதத்தில் ஜனரஞ்சகமான படமாக இப்படம் இருக்கும், என்று இயக்குநர் வடிவுடையான தெரிவித்திருக்கிறார்.