Aug 15, 2019 05:51 AM

அமெரிக்காவில் செட்டிலாகும் பிரபாஸ், அனுஷ்கா!

அமெரிக்காவில் செட்டிலாகும் பிரபாஸ், அனுஷ்கா!

‘பாகுபலி’ படம் வெளியானதில் இருந்து நடிகர் பிரபாஷ், நடிகை அனுஷ்கா காதலிப்பதாகவும், விரைவில் இருவருக்கும் திருமணம் என்றும் தெலுங்கு ஊடகங்களில் செய்தி வெளியாகிக் கொண்டிருப்பதோடு, இந்தியா முழுவதும் இந்த செய்தி தீயாக பரவி வருகிறது.

 

ஆனால், இதற்கு தொடர்ந்து நடிகர் பிரபாஸ் மறுப்பு தெரிவித்து வரும் நிலையில், ‘சஹோ’ படம் ரிலீஸுக்கு பிறகு பிரபாஸுன் திருமண வேலைகள் தொடங்கப்பட்டு விடும் என்றும், அவர் தொழிலதிபரின் மகளை மணக்கப் போவதாகவும், அவர் தற்போது அமெரிக்காவில் இருப்பதாகவும், பிரபாஸின் சகோதரி பேட்டி அளித்தார். அதேபோல், அனுஷ்காவுக்கு அவரது பெற்றோர் தீவிரமாக மாப்பிள்ளை தேடி வருவதாக தகவல் வெளியானது.

 

இதனால், அனுஷ்கா - பிரபாஸ் காதல் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டது, என்று பார்த்தால் தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகி அனுஷ்கா மற்றும் பிரபாஸ் ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்திருக்கிறது.

 

அதாவது, அனுஷ்காவும், பிரபாஸும் அமெரிக்காவில் செட்டிலாக திட்டமிட்டுள்ளார்களாம். இதற்காக இருவரும் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வீடு வாங்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக முன்னணி நாளிதல் ஒன்றில் செய்தி வெளியாகியிருக்கிறது.