May 23, 2019 12:11 PM

பிரபாஸின் ‘சாஹோ’ ஆகஸ்ட் 15 ஆம் தேதி ரிலீஸ்!

பிரபாஸின் ‘சாஹோ’ ஆகஸ்ட் 15 ஆம் தேதி ரிலீஸ்!

‘பாகுபலி’ வெற்றிக்குப் பிறகு பிரபாஸ் எப்படிப்பட்ட படத்தில் நடிப்பார், என்ற எதிர்ப்பார்ப்பு இந்திய அளவில் உருவான நிலையில், ஆக்‌ஷன் திரில்லர் படமான ‘சாஹோ’ வில் பிரபாஸ் நடிக்க தொடங்கியதும், எதிர்ப்பார்ப்பு இன்னும் அதிகரிக்க தொடங்கியது.

 

ரெபல் ஸ்டார் பிரபாஸ் பாரம்பரிய நடைமுறை மற்றும் எது முடியும், எது முடியாது என்ற எண்ணங்களை எல்லாம் உடைப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார். பாகுபலி படத்துக்காக முழுமையாக ஐந்து ஆண்டுகளை அர்ப்பணித்த ஒரே நடிகராக திகழ்ந்தார் பிரபாஸ். அவரது கடின உழைப்புக்கு பலனாக உலகம் முழுக்க பல்வேறு சாதனைகளை புரிந்தது பாகுபலி. 

 

பிரபாஸ் ரசிகர்கள் அவரது அடுத்த படமான ’சாஹோ’ வுக்காக பொறுமையாக காத்திருக்கிறார்கள், அவர்கள் காத்திருப்பு தற்போது முடிவுக்கு வந்திருக்கிறது.

 

பிரபாஸ் Instagramல் சுட்டிக் காட்டியது போல காத்திருப்பு முடிந்து விட்டது. பிரபாஸ் மிகவும் தீவிரமாக இருக்கும் சாஹோவின் சமீபத்திய போஸ்டர் ஒன்றை அவரது Instagramல் வெளியிட்டார். அதில் படத்தின் வெளியீட்டு தேதி 15 ஆகஸ்ட் 2019 என குறிப்பிடப்பட்டிருக்கிறது.

 

சரித்திர சாதனை படைத்த பாகுபலி படத்துக்கு பிறகு ரெபல் ஸ்டார் பிரபாஸின் நடிப்பில் வெளியாகும் முதல் திரைப்படம் என்பதால் வானளாவிய ஒரு எதிர்பார்ப்பு நிலவுகிறது. கதையை பற்றிய ஒரு துணுக்கு கூட வெளியாகாமலேயே இத்தகைய இமாலய எதிர்பார்ப்புகளை ஒரு திரைப்படம் உருவாக்கியிருப்பது இதுவே முதல் முறை.

 

'ஷேட்ஸ் ஆஃப் சாஹோ' பாகம் 1 மற்றும் பாகம் 2 மேக்கிங் வீடியோக்கள் பிரபாஸ் மற்றும் ஷ்ரத்தா கபூரின் பிறந்த நாட்களில் முறையே வெளியிடப்பட்டது. ஒரு புதிய பிரபாஸை காட்டியிருக்கும் அந்த வீடியோக்கள் இது ஒரு பிரமாண்ட ஆக்‌ஷன் திரில்லர் படம் என்பதை பறை சாற்றுகிறது. இருந்தாலும் படத்தின் ஒருவரி கதை புதிராகவே உள்ளது.

 

யு.வி. கிரியேஷன்ஸ் மிக பிரமாண்டமாக தயாரிக்க, சுஜீத் இயக்கியிருக்கும் இந்த சாஹோ படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகம் ஆகிறார் ஷ்ரத்தா கபூர். ஜாக்கி ஷெராஃப், மந்திரா பேடி, நீல் நிதின் முகேஷ், சுங்கீ பாண்டே மற்றும் ஈவ்லின் ஷர்மா ஆகியோரும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.