சந்தோஷத்தில் சாண்ட்ரா, பிரஜன் தம்பதி! - காரணம் இது தான்

சின்னத்திரை மூலம் பிரபலமான பிரஜன் மற்றும் சாண்ட்ரா இருவரும் காதலித்து திருமணம் செய்துக் கொண்டதோடு, திருமணத்திற்குப் பிறகு வெள்ளித்திரையில் சாதிக்க வேண்டும் என்ற கனவோடு பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். ஏராளமான ரசிகர்கள் இவர்களுக்கு இருந்தாலும், சினிமாவில் ஜெயிக்க வேண்டும், என்ற இவர்களது கனவு மட்டு கனவாகவே இருக்கிறது.
பிரஜன் சில படங்களில் ஹீரோவாக நடித்தாலும், அவர் எதிர்ப்பார்த்த வெற்றி கிடைக்காமல் தொடர்ந்து முயற்சித்து வருகிறார். அதேபோல், சாண்ட்ராவும் சினிமாவில் ஹீரோயினாக ஜெயிக்க வேண்டும் என்ற கனவோடு பயணித்துக் கொண்டிருப்பதோடு, சில படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார்.
இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆனாலும், தங்களது கனவுக்காக இல்லற வாழ்க்கையில் சில சந்தோஷங்களை ஒதுக்கி வைத்துவிட்டு சினிமாவை நோக்கி ஓடிக் கொண்டிருப்பவர்கள் தற்போது பிரேக் போட்டதுடன், இல்லற வாழ்வின் சந்தோஷத்தையும் அனுபவிக்க தொடங்கி விட்டார்கள்.
ஆம், பிரஜன் - சாண்ட்ரா தம்பதி விரைவில் பெற்றோராகப் போகிறார்கள். சாண்ட்ரா கர்ப்பமாக இருக்கும் செய்தியை பிரஜன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
10 ஆண்டுகளுக்கு பிறகு குழந்தையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இந்த தம்பதிக்கு ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகிறார்கள்.