Feb 28, 2019 05:04 AM

திருமணத்திற்கு முன்பே கர்ப்பம்! - ஆவேசத்தில் பிரபல நடிகை

திருமணத்திற்கு முன்பே கர்ப்பம்! - ஆவேசத்தில் பிரபல நடிகை

தமிழ் சினிமா மட்டும் இன்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் நடித்து வரும் பிரபல தமிழ் நடிகையான ராய் லட்சுமி, திருமணம் ஆகாமலயே கர்ப்பமாக இருப்பதாக தகவல் ஒன்று வெளியானது.

 

இந்த தகவலால் ஒட்டு மொத்த திரையுலகமே அதிர்ச்சியடைய, இதனை அறிந்த ராய் லட்சுமி, பெரும் கோபமடைந்ததோடு இது குறித்து ஆவேசமாக விளக்கமும் அளித்திருக்கிறார்.

 

இது தொடர்பாக தனது சமூகவலைதள பக்கத்தில் ராய் லட்சுமி வெளியிட்ட விளக்கத்தில், என் வாழ்க்கையில் பல காதல்கள் வந்து போயுள்ளது. ஆனால், அதைப்பற்றியெல்லாம் உங்களிடம் பேச வேண்டிய அவசியமில்லை. என்னை பற்றி தொடர்ந்து வதந்தி பரப்புவதையே சிலர் வேலையாக வைத்திருக்கிறார்கள். நான் மாங்காய் சாப்பிட்டதை வைத்து தான் இந்த வதந்தியை பரப்பியுள்ளனர். இதுபோல தொடர்ந்து வதந்திகளை பரப்பி வந்தால், சட்டபடியான நடவடிக்கையை எடுப்பேன்.” என்று எச்சரித்துள்ளார்.

 

Rai Lakshmi

 

ராய் லட்சுமி குறித்து வெளியான இந்த வதந்திக்கு, அவரது ரசிகர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, அவர் உண்டு, அவர் வேலை உண்டு என்று இருப்பவரை, ஏன் இப்படி வம்புக்கு இழுக்கிறார்கள், என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.