May 13, 2020 12:42 PM

பிரதமர் மோடியின் அறிவிப்பு! - ‘ஆடவர்’ பட தயாரிப்பாளர் சொல்லும் ஐடியா

பிரதமர் மோடியின் அறிவிப்பு! - ‘ஆடவர்’ பட தயாரிப்பாளர் சொல்லும் ஐடியா

கொரோனா பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ள சிறு, குறு நடுத்தர தொழில்களை மேம்படுத்தவும், அனைத்து தரப்பினரின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தவும் ரூ.20 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்படுவதாக பிரதமர் மோடி நேற்று அறிவித்தார். இந்த தொகையில் எப்படிப்பட்ட திட்டங்கள் மேற்கொள்ளப்படும், இதன் மூலம் யார் யார், பயன்பெறுவர்கள் என்ற விவரங்களை இன்று மாலை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிக்க உள்ளார்.

 

இந்த நிலையில், பிரதமர் மோடி அறிவித்த ரூ.20 லட்சம் கோடியால் யார் பயன் பெற்றால், அது நாட்டிற்கும் பயனுள்ளதாக இருக்கும், என்பது குறித்து ‘ஆடவர்’ திரைப்படத்தின் தயாரிப்பாளரும், மக்கள் செயல் பேரவை செயலாளர் சொ.சிவக்குமார் பிள்ளை யோசனை தெரிவித்துள்ளார்.

 

இது குறித்து அவர் கூறுகையில், “கொரானாவை கட்டுப்படுத்த முடியாத நிலையில் மத்திய மாநில அரசு இருக்கிறது. நான்காம் கட்ட ஊரடங்கில் என்ன செய்ய போகிறது இந்தியா அரசு தெரியவில்லை.

 

பொருளாதாரம் வளர்ச்சி பெற 20 லட்சம் கோடி ரூபாய் திட்டம் கொண்டு வரப்போவதாக பிரதமர் மோடி அவர்கள் கூறியுள்ளார். அந்த திட்டம் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பயனளிக்க கூடியவகையில் இருக்க வேண்டும்.

 

இன்றைக்கு இருந்த காசுகளை செலவு செய்துவிட்டு பணப்புழக்கம் இல்லாமல் இருப்பது அவர்கள் தான், அவர்கள் கைகளில் காசு புழங்கினால் தான் இந்தியாவின் பொருளாதாரம் வளர்ச்சி பெரும்.

 

பணக்காரர்களுக்கும், கார்பரேட் கம்பெனிகளுக்கும் பயன்படக்கூடிய வகையில் இருக்க கூடாது. பணக்காரர்களிடம் அந்த பணம் போனால் பணப்புழக்கம் இல்லாமல் முடங்கிவிடும்.” என்று தெரிவித்துள்ளார்.