Oct 10, 2019 04:17 AM
பிரியா பவானி சங்கர், எஸ்.ஜே.சூர்யா மீண்டும் இணையும் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது

‘மான்ஸ்டர்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து கோலிவுட்டின் பிஸியான நடிகர்களின் பட்டியலில் இடம் பிடித்திருக்கும் எஸ்.ஜே.சூர்யா, பல படங்களில் ஹீரோவாக நடித்து வரும் நிலையில், ஒரு படத்தை தயாரித்து, ஹீரோவாகவும் நடிக்கிறார்.
ராதா மோகன் இயக்கும் இப்படத்தில் ஹீரோயினாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்திற்கு தற்சமயம் ‘எஸ்.ஜே.சூர்யா 15’ என்று தலைப்பு வைத்துள்ளனர்.
புதிய பாணியில் காதல் கலந்த ஒரு திரில்லர் படமாக உருவாகும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். கதிர் கலையை நிர்மாணிக்கிறார்.
இப்படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்ற நிலையில், படப்பிடிப்பு நேற்று தொடங்கியது. இப்படத்தை 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினத்தில் ரிலீஸ் செய்ய சூர்யா முடிவு செய்துள்ளார்.