Oct 03, 2019 05:03 AM

சர்ச்சையில் சிக்கிய பிரியா பவானி சங்கர்! - ரெடியாகும் புகார்

சர்ச்சையில் சிக்கிய பிரியா பவானி சங்கர்! - ரெடியாகும் புகார்

‘மேயாத மான்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமான பிரியா பவானி சங்கர், தற்போது ஏகப்பட்ட படங்களில் நடித்து வருவதோடு, கமலின் ‘இந்தியன் 2’, விக்ரமின் 58 வது படம் என்று முன்னணி ஹீரோக்கள் படங்களிலும் நடிக்க தொடங்கியுள்ளார்.

 

மேலும், சுமார் அரை டஜன் படங்களுக்கு அட்வான்ஸ் வாங்கியிருக்கும் பிரியா பவானி சங்கர் இதுவரை எந்த சர்ச்சையிலும் சிக்காமல் தனது சினிமா வண்டியை ஓட்டி வந்தவர், தற்போது ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

 

அதாவது, விக்ரமின் 58 வது படத்தில் ஹீரோயினாக ஒப்பந்தமான பிரியா பவானி சங்கர், தற்போது அப்படத்தி இருந்து விலகுவதாக படக்குழுவிடம் தெரிவித்திருக்கிறாராம். அவர் விலகுவது பெரிய விஷயம் இல்லை என்றாலும், அப்படத்தின் படப்பிடிப்பு நாளை துவங்க உள்ள நிலையில், இப்போது அவர் விலகுவதால், திடீரென்று எப்படி வேறு ஒரு ஹீரோயினை தேர்வு செய்வது என்பதில் தான் படக்குழு குழம்பி போனதோடு, அவர் மீது கடும் கோபமடைந்திருக்கிறார்கள்.

 

‘இந்தியன் 2’ படப்பிடிப்பில் இருக்கும் பிரியா பவானி சங்கரா, ‘விக்ரம் 58’ படத்திற்கு சரியாக கால்ஷீட் ஒதுக்க முடியவில்லையாம். நாளை படப்பிடிப்பு துவங்க நிலையில், பிரியா பவானி சங்கரால் படப்பிடிப்பில் கலந்துக்கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால், படத்தில் இருந்தே விலகிக்கொள்வதாகவும் அவர் தரப்பில் இருந்து கூறப்படுகிறதாம்.

 

இப்படி திடீரென்று அவர் விலகுவதால், அவர் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் ‘விக்ரம் 25’ படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் புகார் கொடுக்கும் முடிவுக்கு வந்திருக்கிறார்களாம்.