Jun 10, 2020 10:55 AM

பிரியங்கா சோப்ராவின் கணவர் வாங்கிய பொருள்! - உலகிலேயே அதிக விலை கொண்டதாம்

பிரியங்கா சோப்ராவின் கணவர் வாங்கிய பொருள்! - உலகிலேயே அதிக விலை கொண்டதாம்

பாலிவுட் சினிமாவின் முன்னணி ஹீரோயினாக வலம் வந்து பிறகு சில ஹாலிவுட் படங்களில் நடித்த பிரியங்கா சோப்ரா, அமெரிக்க பாடகர் நிக் ஜோன்ஸை திருமணம் செய்துக் கொண்டு அந்நாட்டில் செட்டிலாகிவிட்டார்.

 

ஆடம்பர தம்பதி என்று சொல்லக்கூடிய அளவுக்கு, பிரியங்கா சோப்ரா - நிக் ஜோன்ஸ் தம்பதி, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், ரூ.144 கோடியில் வீடு ஒன்றை வாங்கினார்கள். இதையடுத்து, ரூ.3 கோடியில் சொகுசு கார் ஒன்றையும் வாங்கினார்கள்.

 

இந்த நிலையில், பிரியங்கா சோப்ராவின் கணவர் நிஜ் ஜோன்ஸ் புதிய கைக்கடிகாரம் ஒன்றை வாங்கியுள்ளாராம். ஏராளமான வைர கற்கள் பதிக்கப்பட்டுள்ள இந்த கைக்கடிகாரத்தின் விலை ரூ.7.5 கோடியாம். மேலும், உலகிலேயே அதிக விலை கொண்ட கைக்கடிகாரம் இது தானாம்.

 

Priyanka Chopra and Nick Jones

 

சமீபத்தில், நிக் ஜோன்ஸும், பிரியங்கா சோப்ராவும், விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்டார்கள். அப்போது இருவரும் ஜோடியாக போஸ் கொடுக்க, அங்கிருந்தவர்களின் பார்வை முழுவதும், நிக்கின் விலையுர்ந்த கைக்கடிகாரம் மீது தான் இருந்ததாம்.