May 31, 2019 06:23 AM

பிரபாஸ் படத்திற்கு வந்த சிக்கல்! - பிரபலங்கள் விலகல்

பிரபாஸ் படத்திற்கு வந்த சிக்கல்! - பிரபலங்கள் விலகல்

‘பாகுபலி’ வெற்றிக்குப் பிறகு பிரபாஸ் நடிக்கும் படம் ‘சாஹோ’. தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் உருவாகும் இப்படம் மிக பிரம்மாண்டமான முறையி உருவாகியுள்ளது.

 

இதில் பிரபாஸுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் நடித்திருக்கிறார். இவர்களுடன் ஜாக்கி ஷெராஃப், நீல் நிதின் முகேஷ், மந்திரா பேடி, சுங்கி பாண்டே, மகேஷ் மஞ்ச்ரேகர், அருண் விஜய், முரளி ஷர்மா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

 

யுவி கிரியேஷன்ஸ் தயாரித்திருக்கும் இப்படம் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், இப்படத்தில் இருந்து இசையமைப்பாளர்கள் ஷங்கர் இஷான் லாய் விலகியுள்ளார்கள். இது குறித்து தயாரிப்பு தரப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கும் நிலையில், விலகலுக்கான காரணத்தை தெரிவிக்கவில்லை.

 

Shankar Ishan Loy

 

மேலும், ”ஷங்கர் இஷான் லாய் உங்கள் ஆதரவுக்கு நன்றி, பணியாற்றுவதற்கு சிறந்த மனிதர்கள். உங்களுடன் விரைவில் பணிபுரிவதற்கு எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.” என்று தயாரிப்பு தரப்பு டிவிட்டர் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளது.

 

புதிய இசையமைப்பாளர்களை தேர்வு செய்து வரும் ‘சாஹோ’ குழு விரைவில் அது பற்றிய விவரங்களை விரைவில் அறிவிப்பதாகவும் தெரிவித்துள்ளார்கள்.