May 09, 2019 04:29 PM

பிரச்சினைகள் தீர்ந்தது! - அதர்வாவின் ’100’ நாளை ரிலீஸ்

பிரச்சினைகள் தீர்ந்தது! - அதர்வாவின் ’100’ நாளை ரிலீஸ்

அதர்வா, ஹன்சிகா நடிப்பில் உருவாகியுள்ள போலீஸ் த்ரில்லர் படமான ‘100’ ரசிகர்களிடம் மிகப்பெரிய ஏதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், படம் இன்று (மே 9) வெளியாவதாக இருந்தது. ஆனால், சில தவிர்க்க முடியாத பிரச்சினைகள் காரணமாக இன்று படம் வெளியாகமல் போனது.

 

இடையடுத்து படத்தை தயாரித்த ஆரா சினிமாஸ் பிரச்சினைகளை தீர்வு காண்பதற்கான அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டதை தொடர்ந்து, தற்போது அனைத்து பிரச்சினைகளும் முடிந்து, படம் நாளை (மே 10) வெளியிடப்படுகிறது.

 

பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்கள் குறித்து படத்தில் பேசுவதோடு, இதுவரை போலீஸ் கண்ட்ரோல் ரூம் பணி குறித்து எந்த திரைப்படத்திலும் சொல்லப்படாத பல தகவல்களை சொல்லியிருக்கும் இப்படத்தின் சிறப்பு காட்சி நேற்று பத்திரிகையாளர்களுக்கு திரையிடப்பட்டது. படத்தை பார்த்த பத்திரிகையாளர்கள் அனைவரும் படத்தை வெகுவாக பாராட்டியதோடு, படம் கமர்ஷியலாகவும், அதே சமயம் பரபரப்பான த்ரில்லராகவும் இருக்கிறது, என்று கூறி இயக்குநர் உள்ளிட்ட படக்குழுவினரை பாராட்டினார்கள்.

 

அதர்வா முதல் முறையாக போலீஸ் வேடத்தில் நடித்திருக்கும் இப்படத்தை ’டார்லிங்’ புகழ் இயக்குநர் சாம் ஆண்டன் இயக்கியிருக்கிறார்.