May 17, 2019 02:24 PM

பிரச்சினை தீர்ந்தது! - விரைவில் தொடங்கும் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு

பிரச்சினை தீர்ந்தது! - விரைவில் தொடங்கும் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு

ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் உருவாக இருந்த ‘இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி மாதம் துவங்க இருந்த நிலையில், படத்தின் பட்ஜெட் குறித்து யோசித்த லைகா புரொடக்‌ஷன்ஸ் திடீரென்று பின் வாங்கியது.

 

பிறகு கமல்ஹாசன் தேர்தல் பணிகளில் ஈடுபட்டிருப்பதால் தாமதமாவதாக கூறப்பட்டது. இருப்பினும், ஷங்கர் கூறிய பட்ஜெட் தான் படத்திற்கான பிரச்சினை காரணம் என்றும் கூறப்பட்டது. ஏற்கனவே ‘2.0’ படத்தில் ஏகப்பட்ட செலவுகளை இழுத்துவிட்ட ஷங்கர், ‘இந்தியன் 2’விலும் அப்படி எதையாவது செய்துவிடுவாரோ என்று பயந்த லைகா புரொடக்‌ஷன்ஸ் ‘இந்தியன் 2’ படத்தை கைவிட்டது.

 

மேலும், ‘இந்தியன் 2’ படத்தை தயாரிக்க ஷங்கர் வேறு சில நிறுவனங்களுடன் பேச்சு வார்த்தை தொடங்க, அதே சமயம், லைகா நிறுவனம் மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ படத்தை தயாரிக்க முன் வந்ததால், ‘இந்தியன் 2’ படத்திற்கு மூடு விழா உறுதி என்று கூறப்பட்டது.

 

இதற்கிடையே, மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ படத்தை லைகா நிறுவனம் கைவிட்டுவிட்டதாக சமீபத்தில் செய்திகள் பரவிய நிலையில், தற்போது ‘இந்தியன் 2’ படத்தை தயாரிக்க முன் வந்திருப்பதாக கூறப்படுகிறது.

 

இயக்குநர் ஷங்கர் மற்றும் லைகா நிறுவனத்தினர் சமீபத்தில் நடத்திய பேச்சு வார்த்தையில் உடன்பாடி ஏற்பட்டதை தொடர்ந்து ‘இந்தியன் 2’ படத்தை தயாரிக்க லைகா புரொடக்‌ஷன்ஸ் சம்மதம் தெரிவித்துவிட்டதாம். அதன்படி படப்பிடிப்பு வரும் ஜூன் மாதம் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.