Mar 19, 2020 12:26 PM

தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் - முரளி தலைமையிலான அணி அறிவிப்பு

தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் - முரளி தலைமையிலான அணி அறிவிப்பு

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தேர்தல் வரும் ஜூன் மாதம் நடைபெற உள்ள நிலையில், இந்த தேதலில் சுமார் 4 அணிகள் போட்டியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா தலைமையில் போட்டியிடும் அணி அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று மறைந்த இயக்குநரும், தயாரிப்பாளருமான இராம நாராயணனின் மகன் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி தலைமையிலான அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

’தயாரிப்பாளர்களின் நலன் காக்கும் அணி’ என்ற பெயரில் போட்டியிடும் இந்த அணியில், தலைவர் பதவிக்கு இராம நாராயணன் முரளி என்கிற என்.ராமசாமி போட்டியிடுகிறார்.

 

செயலாளர் பதவிக்கு கே.ஜே.ஆர், ரதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார்கள். பொருளாளர் பதவிக்கு சந்திரபிரகாஷ் ஜெயின் போட்டியிடுகிறார்.

 

சுபாஷ் சந்திரபோஸ், மைக்கேல் ராயப்பன் ஆகியோர் செயலாளர் பதவிக்கு போட்டியிடுகிறார்கள். செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு 21 பேர் போட்டியிடுகிறார்கள்.

 

தயாரிப்பாளர்களின் நலன் காக்கும் அணியின் அலுவலகம் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் எஸ்.வி.சேகர் கலந்துக் கொண்டு வாழ்த்து தெரிவித்தார்.