Jan 24, 2019 12:54 PM

தயாரிப்பாளரை மகிழ்ச்சியடைய செய்த ‘ஒற்றைப் பனை மரம்’!

தயாரிப்பாளரை மகிழ்ச்சியடைய செய்த ‘ஒற்றைப் பனை மரம்’!

ஈழப் போரை மையமாக வைத்து உருவாகியிருக்கும் ‘ஒற்றைப் பனை மரம்’ படத்தினால், அப்படத்தை தயாரித்த ஆர்.எஸ்.எஸ்.எஸ் பிக்சர்ஸ் தணிகைவேல், ரொம்பவே மகிழ்ச்சியடைந்திருக்கிறார். காரணம், நல்ல திரைப்படங்களை தயாரிக்க வேண்டும், விநியோகம் செய்ய வேண்டும் என்ற என்னத்தோடு சினிமாவுக்குள் வந்தவருக்கு, அவரது எண்ணம் ஈடேறும் வகையில் இப்படம் அமைந்திருப்பது தான்.

 

போர் முடிவுறும் இறுதி நாட்களில் ஆரம்பிக்கும் இப்படம், சமகால சூழலில் முன்னாள் போராளிகளும் மக்களும் முகம் கொடுக்கும் சொல்லத் துணியாத கருவை தெள்ளத் தெளிவாக உருவாக்கி இருக்கிறார்கள்.

 

யதார்த்த நடிப்பு, இயல்பான காட்சியமைப்பு, இதயத்தை கனத்துப்போக வைக்கும் திருப்பங்கள் என கதைக்குள் உங்களை அழைத்துச் சென்று, ஈழத்தில் கிளிநொச்சியிலுள்ள கிராமத்தில் வாழ வைத்து வதைத்து விடும் அளவிற்கு இப்படத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.

 

இப்படத்தை தயாரித்தது குறித்து எஸ்.தணிகைவேல் கூறுகையில், “’ஒற்றைப் பனை மரம்’ திரைப்படத்தை தயாரித்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறென். ரசிகர்களுக்கு புதுவிதமான அனுபவத்தை இப்படம் கண்டிப்பாக கொடுக்கும். நான் தயாரித்ததில் கிடைத்த மகிழ்ச்சி, நீங்கள் பார்க்கும் போது உங்களுக்கு புரியும்.” என்றார்.

 

Thanigaivel

 

37 சர்சவதேச திரைப்பட விழாக்களில் தேர்வாகியிருக்கும் இப்படம், சிறந்த நடிப்பு, ஒளிப்பதிவு, இசை என 12 பிரிவுகளின் கீழ் விருதுகளை வென்றிருக்கிறது.     

 

உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் உருவாகியிருக்கும் இப்படத்திற்கு அஷ்வமித்ரா இசையமைத்திருக்கிறார். அவரது இசை தமிழ் பாரம்பரிய வாத்தியங்களை மட்டுமே வைத்து இசையமைத்திருப்பது படத்திற்கு ஒரு உயிரோட்டமாக அமைகிறது.

 

சிறந்த இயக்குநர் விருது பெற்ற மண் பட இயக்குநர் புதியவன் ராசையா இயக்கத்தையும், தேசிய விருது பெற்ற சுரேஷ் அர்ஸ் படத்தொகுப்பையும், சர்வதேச விருது பெற்ற இலங்கை ஒளிப்பதிவாளர் மகிந்த அபேசிங்க ஒளிப்பதிவையும் மேற்கொண்டுள்ளனர்.

 

முக்கிய வேடங்களில் புதியவன் ராசையா, நவயுகா, அஜாதிகா, புதியவன், பெருமாள் காசி, மாணிக்கம் ஜெகன், தனவன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.