Jun 06, 2019 10:26 AM

சந்தானத்தை வைத்து 3டி படம் எடுக்க விரும்பும் தயாரிப்பாளர்!

சந்தானத்தை வைத்து 3டி படம் எடுக்க விரும்பும் தயாரிப்பாளர்!

சந்தானம் நடிப்பில் காமெடி பிளஸ் ஆக்‌ஷன் படம் ‘டகால்டி’. 18 ரீல்ஸ் நிறுவனம் சார்பில் திருப்பூரைச் சேர்ந்த பிரபல டாக்டரும், திரைப்பட விநியோகஸ்தருமான எஸ்.பி.செளத்ரியும், ஹண்ட்மேட் பிக்சர்ஸ் சார்பில் சந்தானமும் இணைந்து தயாரிக்கிறார்கள்.

 

இயக்குநர் ஷங்கரிடம் பல படங்கள் இணை இயக்குநராக பணியாற்றிய விஜய் ஆனந்த் இயக்கும் இப்படத்தில் ஹீரோயினாக பெங்காலியில் முன்னணி ஹீரோயினாக உள்ள ரித்திகா சென் நடிக்கிறார். சந்தானத்துடன் முதல் முறையாக யோகி பாபுவும் இப்படத்தில் நடிக்க, இவர்களுடன் ராதாரவி, ரேகா, பாலிவுட் நடிகர் ஹேமந்த்பாண்டே, சந்தானபாரதி, மனோபாலா, நமோ நாராயணன், ஸடண்ட் சில்வா ஆகியோருடன் பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகர் ஒருவர் வில்லனாக நடிக்கிறார்.

 

Dagaalty Heroin

 

இப்படத்தின் மூலம் பின்னணி பாடகர் விஜய் நாராயணன் இசையமைப்பாளராக அறிமுகமாக, தீபக் குமார்பதி ஒளிப்பதிவு செய்கிறார். டி.எஸ்.சுரேஷ் படத்தொகுப்பை கவனிக்க, ஜாக்கி கலையை நிர்மாணிக்கிறார். ஸ்டண்ட் சில்வா ஆக்‌ஷன் காட்சிகளை வடிவமைக்க, ஷோபி நடனத்தை வடிவமைக்கிறார்.

 

இப்படத்தின் படப்பிடிப்பு திருச்செந்தூர், திருநெல்வேலி, காரைக்குடி, சென்னை, அம்பாசமுத்திரம், கடப்பா, புனே, மும்பை போன்ற இடங்களில் நடைபெற்று வருகிறது.

 

Yogi Babu and Santhanam  in Dagaalty

 

மேலும், இப்படத்திற்குப் பிறகு ‘தில்லுக்கு துட்டு’ படத்தை 3டி தொழில்நுட்பத்தில் தயாரிக்க முடிவு செய்திருக்கும் 18 ரீல்ஸ் எஸ்.பி.செளத்ரி, இது குறித்து சந்தானத்துடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.