Mar 09, 2020 05:13 PM

பிரம்மாண்டமான படத்திற்காக மீண்டும் பிரியதர்ஷனுடன் கைகோர்க்கும் தாணு!

பிரம்மாண்டமான படத்திற்காக மீண்டும் பிரியதர்ஷனுடன் கைகோர்க்கும் தாணு!

கடந்த 1996 ஆம் ஆண்டு பிரியதர்ஷன் இயக்கத்தில் வெளியான படம் ‘சிறைச்சாலை’. மலையாளத்தில் ‘காலாபானி’ என்ற தலைப்பில் வெளியான இப்படத்தின், தமிழாக்கத்தை கலைப்பு எஸ்.தாணு வெளியிட்டார். இதில் மோகன்லால் ஹீரோவாக நடிக்க, பிரபு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். பிரபுவின் முதல் மலையாளப் படமும்  இப்படம் தான்.

 

மிக பிரம்மாண்டமான முறையில் உருவான இப்படம், தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளிலும் பெரும் வரவேற்பு பெற்ற நிலையில், அதே பிரம்மாண்டமான முறையில் பிரியதர்ஷன் இயக்கியிருக்கும் வரலாற்று படம் ‘மரைக்கார் அரபிக்கடலிண்டே சிம்ஹம்’.

 

Prabh and Mohanlal in Marakkar Arabikkadal Singam

 

இப்படத்தில் மோகன்லால் ஹீரோவாக நடிக்க, பிரபு முக்கிய வேடம் ஒன்றில் நடித்திருக்கிறார். சிறைச்சாலை படத்திற்குப் பிறகு மோகன்லால், பிரபு சுமார் 25 ஆண்டுகள் இணைந்து நடித்திருக்கும் இப்படத்தின் தமிழ் பதிப்பான ’மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’ படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, தனது வி கிரியேஷன்ஸ் சார்பில் வெளியிடுகிறார்.

 

மேலும் இப்படத்தில் அர்ஜுன், சுனில் ஷெட்டி, மஞ்சு வாரியர், சுஹாசினி, கீர்த்தி சுரேஷ், கல்யாணி பிரியதர்ஷன், முகேஷ், நெடுமுடி வேனு, அசோக் செல்வன், பைசால், சித்திக், சுரேஷ் கிருஷ்ணா உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.

 

Suni Shetty and Ashok Selvan in Marakkar Arabikkadal Singam

 

இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் படம் வரும் மார்ச் 26 ஆம் தேதி வெளியாகிறது.

 

Keerthy Suresh, Manju Warrier and Kalyani Priyadarshan