Dec 29, 2019 03:48 AM

பின்வாங்கிய தயாரிப்பு நிறுவனம்! - சிவகார்த்திகேயனின் புதுப்படம் டிராப்

பின்வாங்கிய தயாரிப்பு நிறுவனம்! - சிவகார்த்திகேயனின் புதுப்படம் டிராப்

’ஹீரோ’ படத்தை தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஒரு படத்தில் நடித்து வருகிறார். ‘டாக்டர்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வரும் நிலையில், ரவிக்குமார் இயக்கத்தில் பாதியில் நின்றுபோன சயின்ஸ்பிக்‌ஷன் படத்தை சிவகார்த்திகேயனே தயாரிக்க முன் வந்திருப்பதால், அப்படத்தின் படப்பிடிப்பும் விரைவில் துவங்க உள்ளது.

 

இதற்கிடையே, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பதாக இருந்த ஒரு படம், டிரப்பாகி இட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிவகார்த்திகேயன் - இயக்குநர் விக்னேஷ் சிவன் கூட்டணி படம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இப்படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயார்க்க இருந்தது. ஆனால், விக்னேஷ் சிவன் மிகப்பெரிய பட்ஜெட் கூறியதால் லைகா நிறுவனம் பின் வாங்கியதால் படம் டிரப்பாகி விட்டதாம்.

 

மேலும், புதிய தயாரிப்பாளரை தேடி அலைந்த விக்னேஷ் சிவனுக்கு ஏமாற்றமே மிஞ்சியதால், அதற்போது அந்த கதையை ஓரம் கட்டி வைத்துவிட்டு, சிறிய பட்ஜெடுக்கான கதையை எழுத தொடங்கியிருக்கிறாராம்.