Aug 14, 2019 05:39 AM

டாஸ்மாக் போல தான் பிக் பாஸ்! - வெடித்தது போராட்டம்

டாஸ்மாக் போல தான் பிக் பாஸ்! - வெடித்தது போராட்டம்

தமிழ் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். டிவி பார்க்காதவர்கள் கூட இந்த நிகழ்ச்சியை பார்க்க ஆர்வம் காட்டுகிறார்கள். காரணம், அடுத்தவர்களைப் பற்றி அறிந்துக் கொள்வதோடு, அடுத்தவர்களின் தனிப்பட்ட விஷயங்களும் நிகழ்ச்சியில் காட்டப்படுவதால் தான்.

 

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சிக்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும், நிகழ்ச்சியை மேலும் எப்படி பரபரப்பாக்குவது, எப்படி சர்ச்சையாக்குவது என்ற யோசனையில் நிகழ்ச்சி குழுவினர் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்காகவே தனது பர்சனல் காரணங்களுக்காக பிக் பாஸ் வீட்டில் தொடர்ந்து இருக்க முடியாமல் வெளியேறிய வனிதாவை மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் அழைத்து வந்திருக்கிறார்கள். அதேபோல், சர்ச்சை நடிகை கஸ்தூரியையும் பெரிய சம்பளம் கொடுத்து பிக் பாஸ் வீட்டுக்கு அழைத்து வந்திருக்கிறார்கள்.

 

தற்போது 50 நாட்களை கடந்திருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு எதிராக சென்னையில் மிகப்பெரிய போராட்டம் வெடித்திருக்கிறது. சமூக ஆர்வலர் ராஜேஷ்வரி பிரியா என்பவர், பிக் பாஸ் நிகழ்ச்சிகாக சென்னை வள்ளூவர்க்கோட்டத்தில் போராட்டத்தை நடத்தினார்.

 

அப்போது நிருபர்களிடம் பேசிய ராஜேஷ்வரி பிரியா, “பிக் பாஸ் நிகழ்ச்சி ரியாலிட்டி ஷோ என்றால் அதற்கான கட்டுப்பாடுகளுடன் நடக்க வேண்டும். ஆனால், அந்த நிகழ்ச்சி அப்படி நடக்கவில்லை. அதில் காதல், கசமுசா, ஆபாசமாக உடை அணிவது போன்றவற்றை காட்டுகிறார்கள். அதே போட்டி முடிந்த பிறகு வெளியே வரும் போட்டியாளர்கள், அதை சாதாரணமாக அவர்  அவர் வேலையை பார்க்கிறார்கள். ஆனால், நிகழ்ச்சியை பார்க்கும் இளைஞர்கள் அதனால் பாதிக்கப்படுகிறார்கள். நிகழ்ச்சியை பார்ப்பது, பார்க்காமல் இருப்பது அவர் அவர் விருப்பம், என்று கூறுவது சரியல்ல. அப்படியானால் பஸ் டாண்டுகளில் ஏன், பிக் பாஸ் நிகழ்ச்சியை விளம்பரம் செய்கிறார்கள். நடிகை, நடிகர்களை போட்டு நிகழ்ச்சியை நடத்துவது ஏன். நிகழ்ச்சியை பார்க்க மக்களை தூண்டுகிறார்கள்.

 

நடிகர் கமல்ஹாசனை ஒப்பந்தம் செய்து, அவர் மூலம் மக்களிடம் நிகழ்ச்சியை கொண்டு சேர்ப்பது ஏன்? எப்படி தெருவுக்கு தெரு டாஸ்மாக்கை திறந்து மக்களை குடிக்க தூண்டுகிறார்களோ, அதுபோல தான் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்க்க மக்கள் தூண்டப்படுகிறார்கள். அதை நிறுத்த வேண்டும்.” என்று தெரிவித்தார்.