பட்டமளிப்பு விழாவில் பப்ளிக் ஸ்டார்!

நடிப்பு மற்றும் தொழில்துறையில் சிறந்து விளங்கி வரும் நடிகர் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர், ‘களவாணி 2’ படத்தின் மூலம் பட்டிதொட்டியெல்லாம் பிரபலமடைந்திருக்கிறார். அப்படத்தை தொடர்ந்து மேலும் பல படங்களில் நடித்து வருபவர், ‘டேனி’ என்ற படத்தில் வரலட்சுமி சரத்குமாருடன் நடிக்கிறார்.
சினிமா மற்றும் பிஸினஸ் மட்டும் இன்றி சமூக பணிகளிலும் ஈடுபட்டு வரும் நடிகர் துரை சுதகார், சமீபத்தில் பட்டமளிப்பு விழா ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு மாணவர்களுக்கு பட்டம் வழங்கினார்.
பெரம்பலூர், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் பயிற்சி மையங்களை நடத்தி வரும் வாசன் கல்வி நிறுவனங்களின் 8 வது பட்டம் மற்றும் பட்டயம் வழங்கும் விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர், நீதியரசர் டி.என்.வள்ளிநாயகம், டாக்டர்.எல்.முத்துக்குமரன் ஆகியோர் பங்கேற்றார்கள்.
நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கிய நடிகர் துரை சுதாகர், கல்வியின் முக்கியத்துவம் குறித்தும், மாணவர்கள் எப்படி இருக்க வேண்டும், என்பது குறித்தும் பேசினார்.