மீண்டும் நயன்தாராவை வம்பிழுக்கும் ராதாரவி!

திமுக வில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்ட நடிகர் ராதாரவி, எப்போதும் போல அதிமுக-வுக்கு தாவியிருக்கிறார். நேற்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் மூன்றாவது முறையாக அதிமுக-வில் இணந்துள்ள அவர், நயன்தாரா, நடிகர் சங்கம் தேர்தல் என்று அனைத்து பிரச்சினைகளையும் மீண்டும் கையில் எடுத்திருக்கிறார்.
ஒரு நடிகைக்காக தன்னை சஸ்பெண்ட் செய்ததை தன்னால் ஜீரணிக்க முடியவில்லை, என்று கூறிய ராதாரவி, சிலருக்கு சிலரோடு இருக்கும் உறவுமுறைகளைப் பற்றி தெரிந்துகொள்ளாமல் கமெண்ட் அடித்ததால் தான் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டதாகவும், கூறினார். இதன் மூலம், அவர் உதயநிதியையும், நயன்தாராவையும் இணைத்து பேசியிருப்பதாக கூறப்படுகிறது.
மேலும், எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாக இருப்பதாக கூறி அவரிடம் நடிகரும், எம்.எல்.ஏ-வுமான கருணாஸ் ரூ.7 கோடி வாங்கி ஏமாற்றியதாகவும் கூறியிருக்கும் ராதாரவி, தன்னை நடிகர் சங்க தேர்தலில் சேர்க்காமல் போனால் தேர்தலே நடக்காது, என்றும் எச்சரித்துள்ளார்.