Jul 25, 2019 07:02 AM

ஹாலிவுட் தரத்தில் உருவாகும் படம்! - சூப்பர் ஹீரோவாகும் ராகவா லாரன்ஸ்

ஹாலிவுட் தரத்தில் உருவாகும் படம்! - சூப்பர் ஹீரோவாகும் ராகவா லாரன்ஸ்

’காஞ்சனா’ சீரிஸ் படங்களின் மூலம் தொடர்ந்து மிகப்பெரிய வெற்றிகளை கொடுத்து வரும் ராகவா லாரன்ஸ், ‘காஞ்சனா 3’ வெற்றிக்குப் பிறகு ‘காஞ்சனா’ படத்தை இந்தியில் ரீமேக் செய்து வருகிறார். அக்‌ஷய் குமார் நடிக்கும் இப்படம் ‘லக்‌ஷ்மி பாம்’என்ற பெயரில் உருவாகி வருகிறது.

 

இப்படத்திற்குப் பிறகு சன் பிக்சர்ஸ் மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமான படம் ஒன்றை தயாரிக்க உள்ளது. 3டி தொழில்நுட்பத்தில் உருவாக உள்ள இப்படத்தை இயக்கி, நடிக்கும் ராகவா லாரன்ஸ், இதில் சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

 

’காஞ்சனா 3’ படம் ரூ.100 கோடி வசூல் செய்ததன் மூலம் முன்னணி மாஸ் ஹீரோக்களின் பட்டியலில் இடம் பிடித்திருக்கும் ராகவா லாரன்ஸ் படங்களுக்கு சிறியவர்கள், பெரியவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு ரசிகர்களும் வருவதால், இந்த 3டி படமும் அப்படிப்பட்ட ரசிகர்களையும், சினிமா ரசிகர்களையும் கவரும் விதத்தில், ஹாலிவுட் தரத்திலான ஒரு பிரம்மாண்ட படமாக உருவாக இருப்பதாக கூறப்படுகிறது.

 

இப்படம் குறித்த முழு விபரங்களும் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாக உள்ளது.