Aug 31, 2018 03:53 AM

இளம் இயக்குநர்கள் விரும்பும் நடிகரான ரகுமான்!

இளம் இயக்குநர்கள் விரும்பும் நடிகரான ரகுமான்!

‘துருவங்கள் பதினாறு’ படத்தின் மூலம் ரிஎண்ட்ரியாகியிருக்கும் ரகுமான், தற்போது தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்து வருவதோடு சில படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார்.

 

தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்ந்திய மொழி திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருபவர், பிரித்விராஜுடன் இணைந்து நடித்திருக்கும் ஆக்‌ஷன் த்ரில்லர் மலையாளப் படமான ‘ரணம்’ படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.

 

முழுக்க முழுக்க அமெரிக்காவில் நடைபெற்ற ‘ரணம்’ படத்தில் ரகுமான் தமிழ் வசனம் பேசி நடித்த டீசர் மிகப்பெரிய வரவேற்பு பெற்றிருக்கும் நிலையில், படத்தின் டிரைலரை நேற்று மோகன்லால் வெளியிட்டார். டிரைலர் வெளியான ஒரு சில மணி நேரங்களில் ஏராளமான மக்களை சென்றடைந்ததோடு, அதில் ரகுமான் நடித்திருக்கும் கதாபாத்திரமும் பெரும் வரவேற்பு பெற்றிருக்கிறது. எனவே, ‘ரணம்’ படம் மலையாளத்தில் ரகுமானுக்கு திருப்புமுனை படமாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

 

Rahman in Ranam

 

மேலும், நிசார் ஷாபி என்ற இளம் இயக்குநர் இயக்கத்தில் ‘செவன்’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இப்படத்தின் டீசரும் சமீபத்தில் வெளியாகி வரவேற்பு பெற்றிருக்கிறது. தெலுங்கில் ‘காஸி’ புகழ் சங்கல்ப் ரெட்டி இயக்கத்தில் வருண் தேஜ், அதிதி ராஜ் நடிக்கும் ‘அந்த ரக்‌ஷா 9000 கி.மீ பேர் அவர்’ எப்ற பிரம்மாண்ட படத்தில், இந்தியாவின் முக்கியமான விஞ்ஞானி வேடத்தில் நடிக்கிறார். இப்படம் தெலுங்கு சினிமாவில் பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்படுத்தியிருக்கும் படமாகும். 

 

இப்படி தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய சினிமாக்களில் பிஸியாக நடித்து வரும் ரகுமான், இளம் இயக்குநர்களின் தேர்வாகவும் மாறியிருக்கிறார்.