Oct 29, 2018 02:41 AM

ரஜினி, கமலுக்கு பிடித்த பிரபல நடிகர் அரசியலில் எண்ட்ரியாகிறார்!

ரஜினி, கமலுக்கு பிடித்த பிரபல நடிகர் அரசியலில் எண்ட்ரியாகிறார்!

தமிழ் சினிமாவுக்கும், தமிழக அரசியலுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்த எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்றவர்கள் தமிழகத்தின் முதல்வரானது போல, தமிழ் சினிமா நடிகர் நடிகைகள் பலர் அரசியலில் ஈடுபட்டு வருகிறார்கள். தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களான ரஜினி மற்றும் கமல் நேரடியாக அரசியலில் இறங்கியுள்ள நிலையில், மேலும் பல நடிகர்களும் அரசியலில் ஈடுபடுவதற்கான சந்தர்ப்பத்தை எதிர்ப்பார்த்து வருகிறார்கள்.

 

இந்த நிலையில், ரஜினி, கமல் என இருவருக்கும் பிடித்த நடிகர் பிரபுவும் அரசியலில் ஈடுபட போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

பிரபுவின் ரசிகர்களையும் மற்றும் அவரது தந்தையான மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் ரசிகர்களையும் பிரபுவின் அண்ணனும், தயாரிப்பாளருமான ராம்குமார் ஒன்றினைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும், விரைவில் ரசிகர்களின் பெரும் கூட்டத்தோடு பிரபு காங்கிரஸ் கட்சியில் இணைய இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 

சென்னை வரும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அன்னை இல்லத்தில் உள்ள சிவாஜி கணேசனின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்திய பிறகு அவரது முன்னிலையில் பிரபு காங்கிரஸில் இணைவார் என்றும் கூறப்படுகிறது. அப்படி அவர் காங்கிரஸ் இணைந்தவுடன் அவருக்கு தமிழக காங்கிரஸில் முக்கியமான பொறுப்பும் கொடுக்கப்பட இருக்கிறார்களாம்.

 

Prabhu

 

இது அதிகாரப்பூர்வ தகவல் இல்லை என்றாலும், தற்போது கோடம்பாக்கத்திலும் தமிழக அரசியலிலும் இந்த தகவல் வைரலாகிக் கொண்டிருக்கிறது.