Dec 27, 2019 07:12 AM

பேரன்களுக்காக வங்கியில் பணம் டெபாசிட் செய்த ரஜினி! - எவ்வளவு தெரியுமா?

பேரன்களுக்காக வங்கியில் பணம் டெபாசிட் செய்த ரஜினி! - எவ்வளவு தெரியுமா?

தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக இருக்கும் ரஜினிகாந்த், சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்கும் புதிய படத்திற்காக ரூ.100 கோடி சம்பளம் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. இதன் மூலம், இந்திய சினிமாவில் ரூ.100 கோடி சம்பளம் வாங்கிய முதல் நடிகர் என்ற பெருமையை ரஜினிகாந்த் பெற்றிருக்கிறார்.

 

ரஜினிகாந்தின் 168 வது படமாக உருவாக உள்ள இப்படத்திற்குப் பிறகு ரஜினிகாந்த் முழு நேர அரசியலில் ஈடுபடுவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதே சமயம், தொடர்ந்து நடிக்கும் முடிவிலும் ரஜினிகாந்த் இருக்கிறாராம். அதற்காக சில இளம் இயக்குநர்களிடம் கதை கேட்க தொடங்கியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 

இந்த நிலையில், ரஜினிகாந்த் தனது மூன்று பேரன்களுக்காக வங்கியில் பல கோடி ரூபாய்க்களை டெபாசிட் செய்திருப்பதாக கூறப்படுகிறது. செளந்தர்யா, ஐஸ்வர்யா என்ற இரண்டு மகள்கள் ரஜினிக்கு இருக்கிறார்கள். இவர்களில் செளந்தர்யாவுக்கு வேத், யாத்ரா என்ற இரண்டு மகன்களும், செளந்தர்யாவுக்கு லிங்கா என்ற ஒரு மகனும் இருக்கிறார். இவர்களது பெயரில் தலா ரூ.25 கோடியை ரஜினிகாந்த் வங்கியில் டெபாசிட் செய்திருக்கிறாராம்.

 

மேலும், பேரன்களுக்கு 25 வயது ஆன பிறகே, பணத்தை அவர்களால் எடுக்க முடியும், என்பதுபோலவும் இந்த டெப்பாசிட்டை ரஜினி போட்டிருக்கிறாராம். அதன் பிறகு, 25 வயதாகும் போது, ஒவ்வொரு பெயரிலும் டெபாசிட் செய்யப்பட்டிருக்கும் இந்த ரூ.25 கோடி ரூ.90 கோடியாக உயர்ந்திருக்குமாம். அதேபோல், 22 வயது அடையும் போது, வட்டி பணம் ரூ.50 லட்சம் இவர்களுக்கு சம்பளமாக கிடைக்கும்படியும் ரஜினிகாந்த் செய்திருக்கிறாராம்.

 

Rajinikanth Grandson

 

ஏற்கனவே கர்நாடக மாநிலத்தில் தனது பெண்கள் பெயரில் பல தொழில்களை செய்து வரும் ரஜினிகாந்த், இந்தியா முழுவதும் பல சொத்துக்களை வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது. அத்துடன், தனது இரண்டாவது மகள் செளந்தர்யாவுக்கு இரண்டாவது திருமணம் நடந்த போது, சீர்வரிசையாக ரஜினிகாந்த் ரூ.500 கோடி கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.