Aug 06, 2018 04:03 PM

பதவி பறிப்பால் அவமானம்! - ரஜினி மன்ற நிர்வாகி தூக்கு போட்டு தற்கொலை

பதவி பறிப்பால் அவமானம்! - ரஜினி மன்ற நிர்வாகி தூக்கு போட்டு தற்கொலை

தேனி மாவட்டத்தை சேர்ந்த ரஜினி மன்ற நிர்வாகி ஒருவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

கடந்த சனிக்கிழமை தேனி மாவட்டத்தில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நிர்வாகி செல்வம் என்பவர் கலந்துக் கொண்டார். ஆனால், நிர்வாகிகள் கூட்டத்தில் செல்வத்தை பதவியில் இருந்து நீக்கம் செய்வதாக அறிவித்தனர். இதனால் மனதளவில் பாதிக்கப்பட்ட நிர்வாகி செல்வம் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

 

செல்வத்தின் தற்கொலை சம்பவம் அப்பகுதி ரஜினி ரசிகர்களிடம் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

 

மேலும், நிர்வாகிகள் கூட்டத்தில் செல்வத்தை அவமானப்படுத்தியதால் தான் அவர் தற்கொலை செய்துக் கொண்டதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.