ரஜினி மகளின் இரண்டாவது திருமணம்! - போலீஸ் பாதுகாப்பு கேற்கும் லதா ரஜினிகாந்த்

ரஜினிகாந்தின் இளையமகளும், திரைப்பட இயக்குநருமான செளந்தர்யா, தனது முதல் கணவரை விவாகரத்து செய்துவிட்டு, குழந்தையுடன் தனியாக வாழ்ந்து வந்த நிலையில், பிரபல தொழிலதிபர் வணங்காமுடியின் மகன் விசாகனுடன் பழக்கம் ஏற்பட்டு பிறகு அது காதலானது.
இதற்கிடையே, செளந்தர்யா - விசாகன் காதலுக்கு பச்சைக்கொடி காட்டிய இரு வீட்டாரும் அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.
செளந்தர்யா - விசாகன் திருமணம் வரும் பிபரவரி 10, 11 ஆகிய தேதிகளில் ரஜினிகாந்தின் போயஸ் கார்டன் இல்லத்தில் நடைபெற உள்ளது.
இந்த நிலையில், ரஜினியின் மனைவி லதா, சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையத்தில், தனது மகளின் திருமணத்திற்காக போலீஸ் பாதுகாப்பு கேட்டு மனு கொடுத்துள்ளார்.
அந்த மனுவில், தனது மகளின் திருமணத்திற்கு தொழிலதிபர்கள், திரையுலக நட்சத்திரங்கள் கலந்துக் கொள்ள இருப்பதால் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும், என்று தெரிவித்துள்ளார்.