May 11, 2019 11:06 AM

அரசியல் கட்சி குறித்து ரஜினியின் முக்கிய அறிவிப்பு!

அரசியல் கட்சி குறித்து ரஜினியின் முக்கிய அறிவிப்பு!

ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசத்தை அவரது ரசிகர்கள் ஆவலோடு எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இதுவரை அரசியல் மற்றும் தேர்தல் குறித்து எதுவும் பேசாமல் இருந்த ரஜினிகாந்த், தற்போது தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் எப்போது வந்தாலும் போட்டியிடுவேன், என்று பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு அறிவித்திருக்கிறார்.

 

இந்த நிலையில், வரும் மே 23 ஆம் தேதிக்கு பிறகு அரசியல் கட்சி குறித்து ரஜினிகாந்த் முக்கிய அறிவிப்பை வெளியிட போவதாக அவரது அண்ணன் சத்தியநாராயண ராவ் தெரிவித்திருக்கிறார்.

 

திருச்சி அருகே உள்ள மணிகண்டத்தில் ரசிகர்கள் ரஜினியின் பெற்றோருக்கு மணிமண்டபம் கட்டியுள்ளனர். 48 நாட்களுக்கு முன்பு திறக்கப்பட்ட இந்த மணி மண்டபத்தில் மண்டல பூஜை நடத்தப்பட்டு இன்று 48 வது நாளி மண்டல அபிஷேகம் நடத்தப்பட்டது.

 

இந்த விழாவில் கலந்துக் கொண்ட ரஜினிகாந்தின் அண்ணன் சன்யநாராயண ராவ் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”எங்களது பெற்றோருக்கு ரஜினி ரசிகர்கள் மணிமண்டபம் கட்டியுள்ளது மகிழ்ச்சி. அதற்கு 48 நாட்கள் மண்டல பூஜை இன்று அபிஷேகம் நடத்தி செய்கிறார்கள். இதில் சாதுக்கள், சன்னியாசிகள், பொதுமக்கள், பக்தர்கள், ரஜினி மக்கள் மன்ற தொண்டர்கள், ரசிகர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

 

இதை பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. தமிழக மக்களுக்கு நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். மணிமண்டபத்தை பார்க்க ரஜினிகாந்த் வருவார். அவர் தற்போது மிகவும் பிசியாக உள்ளார். ஆனால் இங்கு நடக்கும் நிகழ்வை அடிக்கடி போனில் கேட்டுக்கொண்டும், வீடியோவில் பார்த்துக் கொண்டும் உள்ளார்.

 

இங்கு நடைபெறும் இந்த மண்டல பூஜை விழாவில் தமிழக மக்கள் மகிழ்ச்சியாக இருக்கவும், நலமாக இருக்கவும் மழை பெய்து சுபிட்சம் ஏற்படவும் பூஜைகள் செய்யப்பட்டன.

 

தமிழக மக்கள் நன்றாக இருக்க வேண்டும். ரஜினி அரசியல் கட்சி அறிவிப்பை எப்போது அறிவிப்பார் என்று நான் ஏற்கனவே கூறிவிட்டேன். மே 23 ஆம் தேதிக்கு பிறகு அவர் முக்கிய அறிவிப்பு வெளியிடுவார்.

 

Rajini Brother Sathyanarayana Rao

 

ரஜினி அரசியல் பிரவேசம் குறித்து அவர் தாமதம் செய்வதாக சிலர் கூறுகிறார்கள். தாமதம் செய்வது நல்லதுக்காகதான். அவர் தமிழக மக்களுக்கு நிறைய திட்டங்கள் வைத்திருக்கிறார். மணிமண்டபத்தை பார்க்க ரஜினி விரைவில்.” என்றார்.